ராஷ்மிகாவுடன் அடுத்த மாதம் நிச்சயதார்த்தமா? மௌனம் கலைத்த விஜய் தேவரகொண்டா..

Published : Jan 20, 2024, 09:35 AM IST

ராஷ்மிகா உடனான தனது நிச்சயதார்த்தம் குறித்து விஜய் தேவரகொண்டா முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

PREV
18
ராஷ்மிகாவுடன் அடுத்த மாதம் நிச்சயதார்த்தமா? மௌனம் கலைத்த விஜய் தேவரகொண்டா..

அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் மொத்த கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா. இதை தொடர்ந்து நோட்டா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

 

28

இதில் கீதா கோவிந்தம் படத்தில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல் வரவேற்பு கிடைத்த நிலையில், விஜய் - ராஷ்மிகா இருவரின் கெமிஸ்ட்ரியும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஜோடி மீண்டும் இணைந்தது நடித்தனர். 

38

இதனிடையே விஜய் தேவரகொண்டாவும் - ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே செல்வதாகவும் கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது.

48

எனினும் இதுகுறித்து இருவருமே தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை அதே நேரத்தில் இந்த வதந்திகளை மறுக்கவும் இல்லை. ஆனாலும் இவர்களின் காதல் குறித்த வதந்திகள் ஓய்ந்தபாடில்லை. 

58
VIjay Devarakonda and Rashmika

இந்த சூழலில் தான் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடிக்கு வரும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் விரைவில் திருமண தேதி வெளியாகும் என்று சமீபத்தில் ஒரு தகவல் வேகமாக பரவியது. இந்த ஜோடி சமீபத்தில் மாலத்தீவு ட்ரிப் சென்றிருந்த போட்டோக்கள் வைரலானதை தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக வதந்தி பரவியது.

68
Vijay Devarakonda House

இந்த நிலையில் ராஷ்மிகா உடனான தனது நிச்சயதார்த்தம் குறித்து விஜய் தேவரகொண்டா முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பிரபல லைஃப்ஸ்டைல் ஏசியா நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் “ பிப்ரவரியில் நான் திருமணமோ அல்லது நிச்சயதார்த்தமோ செய்ய போவதில்லை.

78

நான் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் நினைக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்திகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

 

88

எனக்கு கையோடு எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்” என்று தெரிவித்தார். இதன் மூலம் தனது நிச்சாயர்த்த வதந்திக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories