5. சாய் பல்லவி திரையில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே சாய் பல்லவி திரைத்துறையில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். அவர் கடைசியாக நடித்திருந்த கார்கி படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் அவர் தன் வசம் 2 படங்களை வைத்துள்ளார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளார்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும்சந்து மொண்டேடி இயக்கி வரும் தண்டேல் என்ற படத்திற்காக நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைகிறார்இப்படத்தின் முதல் காட்சி வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
6. ராஷ்மிகா மந்தனா ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடிகை கடைசியாக சந்தீப் ரெட்டி வாங்காவின் ஆக்ஷன் படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்தார். திரைப்படம் மற்றும் அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தி கேர்ள்பிரண்ட் என்ற ஒரு படத்தில் நடிக்க உள்ளார்., மேலும் ரெயின்போ மற்றும் சாவா ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக உள்ளன. விஜய் தேவரகொண்டாவின் VD12 படத்தில் ராஷ்மிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் ஊகிக்கப்படுகிறது.
7. ஜான்வி கபூர் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகி 6 வருடங்கள் தான் ஆகிறது, ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் கூட நாட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி உள்ளார். இப்போது, ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் தேவாரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது, முதல் பாகம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளிவருகிறது. மேலும், நடிகை மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி மற்றும் உலஜ் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
8. தீபிகா படுகோன் இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகை ஜான்வி கபூர் மட்டுமல்ல. நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD என்ற தெலுங்குப் படத்தில் தீபிகா படுகோனேவும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பசுபதி, திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம், மே 9ஆம் தேதி வெள்ளித்திரைக்கு வர உள்ளது.