மூன்றாம் பிறை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஸ்ரீ தேவி இல்லை.. செம சான்ஸை மிஸ் பண்ண பிரபல நடிகை..

கிளாசிக் ஹிட் படமான மூன்றாம் பிறை படத்தில் நடிக்க, ஸ்ரீ தேவி முதல் சாய்ஸ் இல்லை என்று உங்களுக்கு தெரியுமா?

Actress Sridevi was not first choice for Classic hit Moondram Pirai movie Rya

பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன் – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மூன்றாம் பிறை படம் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. 1982-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையில் உருவான பாடல்கள் இன்றும் கூட பலரின் பிளேலிஸ்டுகளை ஆக்கிரமித்துள்ளது.

Actress Sridevi was not first choice for Classic hit Moondram Pirai movie Rya

இப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்தும் கல்ட் கிளாசிக் படமாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. கமல்ஹாசனும் ஸ்ரீ தேவியும் போட்டிப் போட்டுக்கொண்டு தங்கள் நடிப்பு திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்கள்.


சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல்ஹாசன் பெற்ற நிலையில், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலு மகேந்திரா வென்றார். மேலும் சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம் ஃபேர் விருதையும் பாலு மகேந்திரா பெற்றார். தமிழ்நாடு மாநில அரசின் 5 விருதுகளையும் பெற்றது மூன்றாம் பிறை படம். 

மூன்றாம் பிறை படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் பிரிவை பற்றி பேசும் பேசும் படமாகும். தலையில் காயம் ஏற்பட்டதால் நினைவை இழந்த இளம்பெண்ணாக ஸ்ரீ தேவி இந்த படத்தில் நடித்திருப்பார்.

அந்த இளம்பெண்ணை மீட்டு ஆதரவு கொடுக்கும் பள்ளி ஆசிரியராக கமல்ஹாசன் நடித்திருப்பார். இந்த படத்தில் ஸ்ரீதேவியின் குழந்தைத்தனமான வெகுளியான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆனால் கிளாசிக் ஹிட் படமான மூன்றாம் பிறை படத்தில் நடிக்க ஸ்ரீ தேவி முதல் சாய்ஸ் இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஆம். ஸ்ரீ தேவி நடித்த கேரக்டருக்கு முதலில் ஸ்ரீ பிரியாவை தான் பாலு மகேந்திரா தேர்வு செய்தாராம். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீ பிரியா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

Sri priya

அதன்பிறகே கமல்ஹாசன் ஆலோசனையின் பேரில் ஸ்ரீ தேவியை அந்த படத்தில் நடிக்க வைத்தாராம். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ பிரியா அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியிருந்தார். சாதனை படைத்த அந்த கேரக்டரில் நடிக்க மறுத்ததை நினைத்து வருத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

Latest Videos

click me!