யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது தவெக? விஜய் எடுத்த முக்கிய முடிவு!

Published : Apr 21, 2025, 02:40 PM IST

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தற்போது கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளதாம்.

PREV
14
யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது தவெக? விஜய் எடுத்த முக்கிய முடிவு!

Vijay's dramatic decision? Who will TVK join hands with? Important announcement! தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் விஜய், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் குதித்து அதிரடி காட்டி உள்ளார். ஜனநாயகன் தான் தன்னுடைய கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துள்ள விஜய், தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். ஜனநாயகன் திரைப்படம் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. ஜனநாயகன் ஷூட்டிங் நிறைவடைந்ததும் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய்.

24
TVK Vijay

2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி

விஜய் அரசியலில் குதித்துள்ளதால் தற்போது தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால், தற்போது தேர்தல் வேலைகளை அரசியல் கட்சிகள் முடிக்கிவிட்டுள்ளன. முதற்கட்டமாக கூட்டணி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்... அம்பேத்கர் பிறந்தநாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்

34
TVK chief and actor Vijay

தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி?

அதேபோல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தனித்துப் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. அக்கட்சி முதலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. பின்னர் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கசிந்தன. ஆனால் அது எதுவும் உறுதியாகவில்லை.

44
TVK Alliance

கூட்டணி குறித்து முடிவெடுக்க Vijayக்கு மட்டுமே அங்கீகாரம்

யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யாவிட்டாலும், விஜய் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளதாம் தவெக. தற்போதைய சூழலில் அக்கட்சி, பூத் கமிட்டி அமைப்பதிலும், மக்களை சந்திப்பதிலும் தான் முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் உறுப்பினர் சேர்க்கையை மீண்டும் துரிதப்படுத்தி 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கையை இலக்காக கொண்டு நகர்ந்து வருகிறது. 

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவில் அக்கட்சி தலைவர் விஜய்க்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் சந்திப்பை முடித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்க உள்ளதாம் தவெக. 

இதையும் படியுங்கள்... அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து விஜய் இப்படி சொல்லிட்டாரே! போட்டியே எங்களுக்கும் திமுகவுக்கு தான்!

Read more Photos on
click me!

Recommended Stories