Vijay's Beast song Arabic Kuthu song crosses 700 million views, breaking the record : விஜய் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் பீஸ்ட். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படம் திரையரங்குகளில் ஏமாற்றம் அளித்தாலும், பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி பல்வேறு சாதனை படைத்துள்ளது. இதுவரை ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப்பில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.