மனைவியின் 50வது பிறந்தநாளை ஜாம் ஜாம்னு கொண்டாடிய வெற்றிமாறன் - வைரலாகும் போட்டோஸ்

Published : Mar 18, 2025, 08:25 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தன்னுடைய காதல் மனைவியின் 50வது பிறந்தநாளை கிராண்டாக கொண்டாடி இருக்கிறார்.

PREV
16
மனைவியின் 50வது பிறந்தநாளை ஜாம் ஜாம்னு கொண்டாடிய வெற்றிமாறன் - வைரலாகும் போட்டோஸ்

Vetrimaaran Wife Aarthi 50th Birthday : இயக்குனர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த வெற்றிமாறன் அடுத்ததாக ஆடுகளம் படம் மூலம் 6 தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தார்.

26
Vetrimaaran Family

இதையடுத்து வெற்றிமாறன் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என தொடர்ந்து பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கினார் வெற்றிமாறன். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட் நடிகர்களே வெற்றிமாறன் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர்.

36
Vetrimaaran Wife Aarthi Birthday

டோலிவுட், பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தாலும், நம் மண் சார்ந்த படங்களை மட்டுமே இயக்குவேன் என்கிற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதைத்தொடர்ந்து தற்போது சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் வெற்றி.

இதையும் படியுங்கள்... Vaadivaasal: சூர்யா இன்றி ஆரம்பமான வாடிவாசல்! வெற்றிமாறன் தந்த தரமான அப்டேட்!

46
Aarthi Vetrimaaran 50th Birthday

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியின் 50வது பிறந்தநாளை செம கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. இந்த பிறந்தநாள் விழாவில் திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

56
Vetrimaaran Wife Birthday Photos

குறிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாடகி சைந்தவி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், பாடகர் கார்த்திக்கின் பாட்டு கச்சேரியும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் கேட்டரிங் சர்வீஸ் செய்திருக்கிறார்.

66
Vetrimaaran wife and kids

சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போது முதன்முதலில் ஆர்த்தியை சந்தித்த வெற்றிமாறன், அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். இந்த ஜோடி பின்னர் திருமணம் செய்துகொண்டது. இவர்களுக்கு பூந்தென்றல் என்கிற மகளும், கதிரவன் என்கிற மகனும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Vetrimaaran in TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் வெற்றிமாறன்? மாலை அணிவித்து வரவேற்ற தவெக-வினர்!

Read more Photos on
click me!

Recommended Stories