Khushbu's new film is a mix of romance and comedy - directed by Ashwin Kandasamy! பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் நடிகை குஷ்பு. பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வந்த தர்மத்தின் தலைவன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், பாட்டுக்கு நான் அடிமை, எங்கிட்ட மோதாதே, சின்ன தம்பி, மன்னன், ரிக்ஷா மாமா, அண்ணாமலை, நாட்டாமை என்று ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோருக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.
Ashwin Kandhasamy, debut director, Sundar C, Khushbu 2nd Production
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 185க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இதில் 100 படங்கள் தமிழில் நடித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் முக்கிய கதாபாத்திரங்களில் குஷ்பு நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கலக்கி வருகிறார்.
Tamil film update, Kollywood latest news, Khushbu Movie
இந்த நிலையில் தான் குஷ்பு ஏற்கனவே அவ்னி சினிமேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதோடு இந்த நிறுவனத்தின் மூலமாக சுந்தர் சி நடித்த மற்றும் இயக்கிய படங்களை தயாரித்து வந்தார். இப்போது 2ஆவதாக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அவ்னி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை குஷ்பு தொடங்கியிருக்கிறார். குஷ்பு பென்ஸ் மீடியாவுடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்குகிறார்.
Khushbu new movie, Khushbu new Production Movie
இந்தப் படத்தில் சந்தோஷ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கடேஷ் நடிக்கிறார். இவர் ரசவாதி, சாலா, நா நா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அன்புடன் குஷி என்ற சீரியல் மூலமாக பிரபலமானார். இவர்களுடன் இணைந்து சம்யுக்தா விஸ்வநாதன், பிஜோன் சுர்ராவ், வினோஷ் கிஷன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். முழுக்க காதல், ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த ஒரு படமாக சிறிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. மேலும், கிராமம் மற்றும் நகரம் இரண்டையும் பின்னணியில் வைத்து இந்தப் படம் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.