டிராகனுக்கு போட்டியாக வந்த 'ஸ்வீட் ஹார்ட்' வசூலில் சூப்பரா? சுமாரா? 3-ஆவது நாள் வசூல் விவரம்!

Published : Mar 17, 2025, 06:20 PM IST

கடந்த வாரம், மார்ச் 14-ஆம் ஆம் தேதி ரிலீஸ் ஆன, ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் 3-ஆவது நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவலை  பார்ப்போம்.  

PREV
14
டிராகனுக்கு போட்டியாக வந்த 'ஸ்வீட் ஹார்ட்' வசூலில் சூப்பரா? சுமாரா? 3-ஆவது நாள் வசூல் விவரம்!

ஹரீஷ் கல்யாண், கவின், மணிகண்டன், வரிசையில் தொடர்ந்து தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும், ரியோ ராஜ் நடிப்பில் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'ஜோ' திரைப்படம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான 'நிறம் மாறும் உலகில்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
 

24
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட்

மேலும் இந்த ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள இரண்டாவது திரைப்படம் தான், 'ஸ்வீட் ஹார்ட்' (Sweet Heart Movie). காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஸ்வினீத் எஸ் சுகுமார் என்பவர் எழுதி - இயக்க, யுவான்ஷாங்கர் ராஜா தயாரித்துள்ளார். ரியோ ராஜ் ஜோடியாக கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பெருசு vs ஸ்வீட் ஹார்ட் : பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளியது யார்?

34
5 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம்

மேலும் ரெஞ்சி பணிக்கர், ரெடிங்ஸ் கிங்ஸ்லி, அருணாச்சலேஸ்வரன், துளசி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்துள்ள இந்த படத்தில், பாடல்கள் ஏதும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும், BGM இசை ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், 3-ஆவது நாள் முடிவில் ( 3 Day Box Office Collection) 2 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

44
ஸ்வீட் ஹார்ட் படத்தின் மூன்றாவது நாள் வசூல்:

வெளியான முதல் நாளில் இருந்தே இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி முதல் நாள் இப்படம் 90 லட்சம் வரை வசூல் செய்தது என்றாலும்...  அடுத்தடுத்த நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்த போதும், முதல் நாள் வசூலை விட குறைவாகவே வசூல் செய்தது. வரும் நாட்களில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே நேரம் டிராகன் திரைப்படம் 4 வாரத்தை எட்டிய போதும் இதுவரை நல்ல வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sweet Heart Day1 Collection: 'ஸ்வீட் ஹார்ட்' ரியோ - யுவனை காப்பாற்றியதா? காலைவாரியதா? முதல் நாள் வசூல்!

Read more Photos on
click me!

Recommended Stories