தீபிகா படுகோன் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் என பிரேக்கப் செய்து பிரிந்தனர். பிரேக்கப் குறித்து தீபிகா படுகோன் கூறிய தகவல் திகைப்பூட்டும் காரணம் பற்றி பார்க்கலாம்.
தீபிகா படுகோனே மற்றும் ரன்பீர் கபூரின் காதல் 2000-களில் அதிகம் பேச பட்ட ஒரு காதலாக இருந்தது. சித்தார்த் ஆனந்த் நடித்த 'பச்னா ஏ ஹசீனோ' படப்பிடிப்பின் போது இருவரும் தீபிகாவும், ரன்பீரும் முதல் முறையாக சந்தித்த நிலையில், பின்னர் அந்த சந்திப்பு தொடரவே காதலாக மாறியது. ஆனால் இவர்களின் காதல் வாழ்க்கை திருமண உறவில் முடிவதற்கு முன்பே பிரேக்கப்பில் முடிந்தத்த்து.
26
ரன்பீர் உடனான பிரேக்கப் குறித்து தீபிகா படுகோன்
தீபிகாவும் - ரன்பீரும், இரண்டு வருட காதலுக்கு பின்னர் 2009 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் பிரிய காரணம் நடிகை கத்ரினா கைப் என கூறப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில், தீபிகா படுகோன் ரன்பீர் கபூருடனான பிரேக்கப் குறித்து திகைப்பூட்டும் விதமான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் தீபிகா படுகோன் 'எனக்கு காதல் மற்றும் அதை கடந்து இருக்கும் உறவு என்பது உடல் பற்றி மட்டும் இல்லை. உணர்வு ரீதியாகவும் இருக்க வேண்டும்' என்று விரும்பினேன். 'நான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது எப்போதும் ஏமாற்றியது இல்லை. அப்படி இருக்கும்போது ரிலேஷன்ஷிப்பில் ஏன் இருக்க வேண்டும்? சிங்கிளாக இருந்து என்ஜாய் செய்வது பெட்டர்.
46
கையும் களவுமாக சிக்கிய ரன்பீர்
ஆனால் நான் நம்பியவர் அப்படி இல்லை. அதனால் நான் கஷ்டப்பட்டேன்' என்று தீபிகா கூறினார். ரன்பீர் கபூர் மற்றொரு ஹீரோயினுடன் இருப்பதை தீபிகா நேரடியாக பார்த்து, ரன்பீர் கையும் களவுமாக சிக்கிய பின்பே அவரிடம் இருந்து விலக முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
ரன்பீர் கபூர் தற்போது ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்துள்ளார்
ஆனால் ரன்பீர் தனக்கு செய்த துரோகத்தின் வலி மனதில் இருந்தாலும்... ரன்பீரை எந்த ஒரு திரைப்பட விழாவில் கண்டாலும், நட்பு ரீதியாக புன்னகையோடு வரவேற்பவர் தீபிகா. ரன்பீர் தீபிகா உடனான பிரேக்கப்புக்கு பின்னர், கத்ரினா கைப்பை சில வருடம் காதலித்த நிலையில், பின்னர் அவரிடம் இருந்தும் பிரிந்து ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரீஹா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
66
தீபிகா ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்தார்
அதே போல் தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடனட்டை ஆண்டு துவா படுகோன் சிங் என்கிற மகள் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.