மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஸ்டோரியை பகிர்ந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் மூத்த சகோதரி!

Published : Mar 17, 2025, 03:51 PM IST

Sunaina Roshan Alcohol Habit : மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஷயம் பற்றி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் மூத்த சகோதரி சுனைனா ரோஷன் கூறியுள்ளார்.

PREV
13
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஸ்டோரியை பகிர்ந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் மூத்த சகோதரி!

Sunaina Roshan Alcohol Habit : சினிமா துறையில் நிறைய ஹீரோக்களுக்கு சகோதரிகள் இருக்கிறார்கள். தங்கள் உடன் பிறந்தவர்களுடன் அன்பாக இருக்கும் ஹீரோக்களை பார்க்கிறோம். பான் இந்தியா ஸ்டார் ஹிருத்திக் ரோஷனுக்கு கூட ஒரு சகோதரி இருக்கிறார். ஹிருத்திக் ரோஷன் அக்கா பெயர் சுனைனா ரோஷன். அவர் பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் சுனைனா ரோஷன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தான் மதுவுக்கு அடிமையான விஷயத்தை சுனைனா ரோஷன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறினார். தன்னை மதுவில் இருந்து விலக்க குடும்ப உறுப்பினர்களால் கூட முடியவில்லை என்று சுனைனா கூறினார். என் மனசு பலவீனமாக இருந்த நேரத்தில் மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். மனசு கஷ்டமாக இருக்கும்போது மது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. மது கெட்ட பழக்கம் என்று சொல்ல முடியாது. அதன் மேல் கட்டுப்பாட்டை இழக்கும்போது அது கெட்டதாக மாறும் என்று சுனைனா கூறினார். 

23
Sunaina Roshan, Hrithik Roshan, Sunaina Roshan Drinking Habit

ஒரு கட்டத்தில் நான் மதுவின் மேல் கட்டுப்பாட்டை இழந்தேன். அந்த பழக்கம் எனக்கு அடிமையாகிவிட்டது. ஒரு கட்டத்தில் காலையிலிருந்து இரவு வரை குடித்துக்கொண்டே இருந்தேன். அதிக போதையில் நிறைய முறை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இருக்கிறேன். என்னிடம் இருந்து இந்த பழக்கத்தை விலக்க குடும்ப உறுப்பினர்கள் நிறைய முயற்சி செய்தார்கள். ஹிருத்திக் ரோஷன் கூட நிறைய ட்ரை பண்ணாராம். அம்மா அப்பா ராகேஷ் ரோஷன், பிங்கி என் கிரெடிட் கார்டுகளை பிடுங்கினார்கள். நண்பர்கள் வீட்டுக்கு, பார்ட்டிகளுக்கு போக விடவில்லை.

33
Sunaina Roshan Alcohol Habit, Sunaina Roshan Drinking Habit

இருந்தாலும் நான் மதுவில் இருந்து விலக முடியவில்லை என்று சுனைனா கூறினார். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னுடைய மது பழக்கம் ரொம்ப ஆபத்தாக மாறுகிறது என்று சுனைனா உணர்ந்தாராம். தானாகவே இந்த பழக்கத்தில் இருந்து விலக முடிவு செய்தாராம். இதற்காக சுனைனா ரீஹாபிடேஷன் சென்டரில் சிகிச்சை கூட எடுத்தாராம். கடைசியில் இந்த பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்ததாக சுனைனா கூறினார். ஆனால் மதுவுக்கு இவ்வளவு அடிமையாக காரணம் என்னவென்று அவர் சொல்லவில்லை. 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories