அரசியின் காதலை போட்டு உடைத்த சரவணன்; மயங்கிய பாண்டியன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

Published : Mar 17, 2025, 02:39 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசியைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட சரவணன் அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் உண்மையை சொல்லிவிட்டார். அதிர்ச்சி அடைந்த பாண்டியன் மயங்கி கீழே விழுந்துள்ளார்.  

PREV
15
அரசியின் காதலை போட்டு உடைத்த சரவணன்; மயங்கிய பாண்டியன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கடந்த வாரம் குமாரவேல் உடன் தியேட்டருக்கு சென்ற அரசியை அவரது அண்ணன் சரவணன் பார்த்து வீட்டிற்கு அழைத்து வரும் காட்சியுடன் முடிந்தது. இன்றைய 429ஆவது எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர், செந்தில், பாண்டியன் என்று எல்லோரையும் வீட்டிற்கு வர வழைத்தார் சரவணன். ஆனால், என்ன பிரச்சனை என்று யாரிடமும் சொல்லவில்லை. இதனால், அனைவரும் ஒரு விதமான பதற்றத்திலேயே இருக்கும் நிலையில், சரவணன் மட்டும் வீட்டிற்கு வரவில்லை என்பதால், அவருக்கு எல்லோருமே போன் செய்கிறார்கள். அவர் எடுக்கவே இல்லை.

25
உண்மையை உடைத்த சரவணன்

இதையடுத்து வீட்டிற்கு வந்த சரவணனிடம் அண்ணா வேண்டாம் வேண்டாம் என்று அரசி கதறுகிறாள். ஆனால், சரவணன் அவரது கையை பிடித்து வீட்டிற்குள் அழைத்து வருகிறார். அரசி மட்டும் அழுது கொண்டே இருக்கும் நிலையில், சரவணன் அரசி காலேஜ் போகவில்லை என்று ஆரம்பிக்கிறார். அவர் நேரடியாக விஷயத்தை சொல்லாமல் விழுங்கி விழுங்கு சுற்றி வளைத்து சொல்ல ஆரம்பிக்கிறார். நம் அனைவரிடமும் காலேஜூக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு போன அரசி காலேஜூக்கு போகவில்லை. அவர் சினிமாவுக்கு காதலனோடு போயிருந்தார் என கூறுகிறார்.

Pandian Stores: அரசியின் காதலுக்கு ஆப்பு வைக்க போகும் பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!

35
மகளை நம்பும் கோமதி

கோமதி மட்டும் என்னுடைய மகள் அப்படியெல்லாம் செய்யமாட்டாள் என்று அழுகிறார். இல்லை அம்மா, நான் அவளும் காதலனும் தியேட்டரில் இருந்து வெளியில் வருவதை பார்த்தேன் என்று சொல்கிறார். இதையே உங்களால் தாங்க முடியவில்லையே அந்த காதலன் யார் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீங்களோ என்று ஒருவிதமான பதற்றத்துடன் அழுது கொண்டே , உங்களுடைய அண்ணன் மகன் குமாரவேல் உடன் தான் அரசி படத்துக்கு போயிருந்தாள் என சரவணன் உண்மையை அடைகிறான்.

45
அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம்

இதைக் கேட்ட வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஒன்றுமே பேச முடியாமல் தவிக்கிறார்கள். பாண்டியனும், கோமதியும் எதுவும் பேசாமல் அழுது கொண்டே இருக்க கோபத்தின் உச்சத்திற்கு சென்ற செந்தில் அரசியை அடிக்க முயற்சிக்கிறார். அவரை மீனா தடுத்து நிறுத்துகிறார். அதன் பிறகு கதிரும் தன் பங்கிற்கு பேசுகிறார்.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் அதிர்ச்சியில் மயங்கிவிழுகிறார்.

Hema Rajkumar: 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ஹேமாவுக்கு நடந்த அவமானம்; பட வாய்ப்பு தருவதாக ஷாக் கொடுத்த மேனேஜர்!

55
மயங்கி விழும் பாண்டியன்

இதனால் துடித்து போன அனைவரும் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்கிறார்கள். அதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் 429ஆவது எபிசோடு முடிவடைகிறது. நாளைய 430ஆவது எபிசோடில் தனது மகள் அரசி காதலிப்பது தெரிந்த பாண்டியன் மற்றும் கோமதியின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதே போன்று அரசியின் காதல் விவகாரம் பற்றி நன்கு தெரிந்த சுகன்யா அடுத்து என்ன செய்வார்? குமாரவேல் மற்றும் அவரது அப்பா இருவரும் என்ன செய்வார்கள் என்பதையெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். இந்த வாரம் முழுவதும் அரசியின் காதல் விவகாரத்தை நோக்கி தான் இந்த சீரியல் செல்லும் என்பது தெரிகிறது.

click me!

Recommended Stories