Kangana Ranaut Emergency Movie : கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு வந்த விமர்சனங்களை நடிகை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதில், இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் என்று ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அதற்கு கங்கனா பதிலளித்திருந்தார். அந்த பதில் வைரலாகி வருகிறது.
எமர்ஜென்சி திரைப்படத்தை கங்கனா ரனாவத் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த ஜனவரி மாதம் திரைக்கு வந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன எமர்ஜென்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தியேட்டரில் தோல்வியை தழுவிய இப்படம் அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.