நடிகர் - நடிகைகள் பற்றிய சர்ச்சைகளுக்கும், கிசுகிசுவுக்கும் திரையுலகில் எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில், பல வருடங்களாக ரசிகர்கள் மனதை ஆட்சி செய்த, நடிகை சிம்ரனின் திரையுலக வாழ்க்கை சரிந்ததற்கு காரணம் முக்கிய நடிகருடனான காதல் கிசுகிசு என்பது உங்களுக்கு தெரியுமா?
அறிமுகமான வேகத்தில் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறியவர் சிம்ரன். இவர் ஹீரோயினாக தமிழில் அறிமுகமான VIP திரைப்படம், 100 நாட்கள் திரையரங்கில் ஓடியது. இதை தொடர்ந்து, தளபதி விஜய்யுடன் 'ஒன்ஸ் மோர்', 'நேருக்கு நேர்', 'பூச்சூடவா', என ஒரே வருடத்தில் அடுத்தடுத்து 4 படங்களில் ஹீரோயினாக நடித்தார். நடிப்பில் மட்டும் அல்ல, இவருடைய துள்ளலான டான்ஸுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
26
ரசிகர்களின் கனவு கன்னி சிம்ரன் :
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்தார். 90-ஸ் காலகட்டத்தில், இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன் மற்ற மொழிகளில் நடித்திருந்தாலும், இவருக்கு அதிக வாய்ப்புகளையும், வெற்றி படங்களையும் கொடுத்து அரவணைத்து தமிழ் திரையுலகம் தான்.
சிம்ரன் ஹீரோயினாக அறிமுகமானதில் இருந்தே... அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கிய ஒரு பிரபலமாகவே பார்க்கப்படுகிறார். ஆம், சிம்ரன் நடிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் விஜய்யுடன் சேர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்ததால் என்னவோ, தளபதி விஜய்யுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.
46
ராஜு சுந்தரத்துடன் ரகசிய நிச்சயதார்த்தம்
இதன் பின்னர், பிரபு தேவாவின் சகோதரர் ராஜு சுந்தரத்தை காதலித்ததாக கூறப்பட்டது. இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டன. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த நிலையில் தான், கமல்ஹாசனுடன் ஒருபடத்தில் இணைந்து சிம்ரன் நடித்து வந்தார். இந்தப் படத்தில் ராஜு சுந்தரத்திடம் சொல்லாமலேயே கமல்ஹாசனுடன் ஒரு லிப் லாக் காட்சியில் சிம்ரன் நடித்ததாகவும், இது ராஜு சுந்தரத்திற்கும் சிம்ரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்ததாக செய்திகள் வந்தன.
56
லிப் லாக்கால் நடந்த பிரேக்கப்
இறுதியில் இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாகத் கூறப்பட்டது. பின்னர் கமல்ஹாசன் தனது இரண்டாவது மனைவி சரிகாவைப் பிரிந்த கமல், சிம்ரனை காதலித்து வந்ததாகவும், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் வாழ்ந்ததாக கூறப்பட்டது. கமல் - சிம்ரனை விட 20 வயது மூத்தவர் என்பதால், சிம்ரன் குடும்பத்தினர் இவர்களின் உறவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில்... அவரிடம் இருந்து விலகி தீபக் பாகா என்கிற உறவினரையே திருமணம் செய்து கொண்டு செட்டி ஆனார்.
தற்போது சிம்ரனுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கூடிய விரைவில் சிம்ரனின் மூத்த மகன் திரையுலகில் நடிகராக அறிமுகமாவார் என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் நடனம் - நடிப்பு என இரண்டிலும் சிம்ரன் கவனம் செலுத்தி வருகிறார். கதையின் நாயகியாக கம் பேக் கொடுக்க வேண்டும் என பல வருடங்களாக இவர் முயன்று வரும் நிலையில்... தற்போது வரை இவரது ஆசை நிறைவேறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது