இயக்குநர் திருச்செல்வம் தன்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொன்னது, மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் தான் டாப்பில் உள்ளது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் வெற்றி வசந்துக்கு ஜோடியாக அவரது மனைவியாக நடித்து வருகிறார் கோமதி பிரியா. சிறகடிக்க ஆசை சீரியலில், இவர்களுடன் இணைந்து ஆர் சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், பாக்கியலட்சுமி, நரசிம்ம ராஜூ உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
25
கோமதி ப்ரியா நடித்த சீரியல்கள்
கோமதி பிரியா இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னதாக ஓவியா, வேலைக்காரன், ஹிட்லர் கரி பெல்லம் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். ஒரு சில ரியாலிட்டி ஷோக்களிலும் கோமதி பிரியா கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் அண்மையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார். அவருக்கு விருது வழங்கப்பட்டது. அதுவும், அவருக்கு பிடித்த இயக்குநரான திருச்செல்வம் கையால் விருது வழங்கப்பட்டது.
விருது விழாவில் திருச்செல்வம் கையால் விருது பெற்ற கோமதி ப்ரியா
அப்போது பேசிய கோமதி பிரியா இயக்குநர் திருச்செல்வம் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: திருச்செல்வம் சார் கையால் நான் விருது வாங்குவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, சார் என்னிடம் உங்களை எப்படி மிஸ் பண்ணேன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
45
திருச்செல்வம் சொன்ன வார்த்தை
அவரது சீரியல்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவர் இயக்கிய கோலங்கள், எதிர்நீச்சல் போன்ற சீரியல்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படியிருக்கும் போது அவரது இயக்கத்தில் ஒரு சீரியல்களில் நடிக்க வேண்டும் என்பது பலரது கனவு. அப்படிதான் எனக்கும் இருந்தது. அவர் மதுரை பொண்ணான உங்களை எப்படி மிஸ் பண்ணேன் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறிய அந்த வார்த்தை எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் கோமதி பிரியாவிற்கு நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அசுரன் படத்தில் தனுஷின் இளம் வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க கோமதி பிரியாவை இயக்குநர் வெற்றிமாறன் தேர்வு செய்து வைத்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்த போது கோமதி பிரியா தெலுங்கு சீரியலில் பிஸியாக இருந்ததால் அவரால் அசுரன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.