ராதிகா வந்தாலே செருப்பை பார்ப்பாராம் ரஜினி; பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா?
நடிகை ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் ரஜினிகாந்த் தன்னுடைய செருப்பை தான் முதலில் பார்ப்பாராம், அதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
நடிகை ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் ரஜினிகாந்த் தன்னுடைய செருப்பை தான் முதலில் பார்ப்பாராம், அதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
Rajinikanth Radhika Funny Conversation : ராதிகா, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் இவர் 80 மற்றும் 90-களில் செம பிசியான நடிகையாக வலம் வந்தார். தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராதிகா, சின்னத்திரை சீரியல்களையும் தயாரித்து வருகிறார். நடிகர் சரத்குமாரின் மனைவியான இவர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், சத்யராஜ் உள்பட பல்வேறு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சில ஹீரோயின்களுடன் தான் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதில் நடிகை ராதிகாவும் ஒருவர். நல்லவனுக்கு நல்லவன், மூன்று முகம், ஊர்க்காவலன், போக்கிரி ராஜா, ரங்கா, நன்றி மீண்டும் வருக போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களும் அதில் அடங்கும். அதிக படங்களில் இணைந்து நடித்ததால், ரஜினிகாந்த் மற்றும் ராதிகா இடையே நல்ல நட்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்தைப் பற்றி ராதிகா ஒரு சீக்ரெட்டை சொல்லி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஜெட் வேகத்தில் முடிவடைந்த கூலி ஷூட்டிங்! பிரம்மிக்க வைக்கும் மேக்கிங் வீடியோ இதோ
ஒரு நாள், ரஜினிகாந்த் ஒரு ஃபங்ஷனுக்கு வந்தபோது ரப்பர் செருப்பு அணிந்து வந்தாராம். அதைப் பார்த்த ராதிகா அவரிடம் சென்று ‘நீங்க பெரிய நடிகர்தானே... சூப்பர்ஸ்டார்னு கூட எல்லாரும் சொல்றாங்க’னு சொன்னேன். அதற்கு ரஜினிகாந்த் ஆமா... ஆமா என பதில் அளித்திருக்கிறார். பின்னர் ஏன் இப்படி செருப்பு போட்டுட்டு வர்றீங்கனு கேட்டிருக்கிறார் ராதிகா. அன்றிலிருந்து என்னை எங்கு பார்த்தாலும் முதலில் செருப்பை தான் பார்ப்பார் ரஜினி. அந்த பயம் அவருக்கு எப்பவுமே இருக்கு.
கோச்சடையான் படத்தின் ஷூட்டிங்கிற்காக லண்டனுக்கு சென்றிருந்தபோது, அவரிடம் என்ன ரஜினி ஷூ போட்டிருக்கீங்கனு ராதிகா கேட்டிருக்கிறார். உடனே நீங்க வந்திருக்கீங்கல்ல அதான் கரெக்டா போட்டிருக்கிறேன் என்று பதில் சொன்னாராம் சூப்பர்ஸ்டார். இப்படி ரஜினியே பார்த்து பயப்படும் ஒரு நடிகையாக ராதிகா இருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் எங்கு பார்த்தாலும் ஜாலியாக கலாய்த்து பேசும் ஒரு நடிகை என்றால் அது ராதிகா தானாம். அந்த அளவுக்கு இவர்களது பிரெண்ட்ஷிப் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... Radhika's Surgery: ராதிகாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை! என்ன ஆச்சு? மகளிர் தினத்தில் பகிர்ந்த வலிமையான பதிவு!