இயக்குனருக்கே தெரியாமல் மழை பிடிக்காத மனிதன் படத்தில் 2 நிமிட சீனை சேர்த்தாரா விஜய் ஆண்டனி? அவரே தந்த விளக்கம்

First Published | Aug 5, 2024, 12:32 PM IST

மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய 2 நிமிட காட்சி குறித்து நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

Mazhai Pidikkatha Manithan

கோலிசோடா படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆனது. அப்படம் ரிலீஸ் ஆனதும் முதல் ஷோ பார்த்துவிட்டு இயக்குனர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

Vijay Milton

அந்த வீடியோவில், மழை பிடிக்காத மனிதன் படத்தை நிறைய ட்விஸ்ட்டுகளோடு தான் இயக்கி உள்ளதாகவும், ஆனால் தியேட்டரில் படத்தில் ஆரம்பத்தில் இரண்டு நிமிட காட்சி இடம்பெறுகிறது. அதிலேயே படத்தில் உள்ள ட்விஸ்ட் அனைத்தையும் சொல்லிவிடுகிறார்கள். அந்த காட்சியை நான் வைக்கவில்லை. என்னுடைய அனுமதி இல்லாமல் அந்த காட்சி படத்தில் இடம்பெற்று இருக்கிறது என தனது மனக்குமுறல்களை வீடியோவாக வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்... அவசரப்பட்டு இப்படி பண்ணிட்டேனே... கோட் படம் பார்த்ததும் வருத்தத்துடன் VP-யிடம் விஜய் கூறிய விஷயம்

Tap to resize

Vijay Antony, Blue sattai Maaran

இதையடுத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை பார்த்து விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் தனக்கு தெரியாமல் 2 நிமிட காட்சி இடம்பெற்றிருக்கும் விஷயத்தை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி, விஜய் ஆண்டனி தற்போது நடிகர், இசையமைப்பாளர் மட்டுமின்றி படத்தொகுப்பு, டைரக்‌ஷன் என அனைத்திலும் மூக்கை நுழைத்து வருவதால், அவர் தான் இதுபோன்ற காட்சியை சேர்த்திருப்பார் என்கிற தோணியில் பேசி இருந்தார்.

Vijay Antony about Mazhai Pidikkatha Manithan Mystery scene

இதனால் பதறிப்போன விஜய் ஆண்டனி, தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அது நான் இல்லை என ஹைலைட் செய்திருக்கும் அவர், மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் 2 நிமிட காட்சியை தன் அனுமதி இன்றி யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்திருந்தார். அது நான் இல்லை, இது சலீம் 2 இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

இதையும் படியுங்கள்... 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் ஹீரோக்கள்.. ரஜினி, விஜய், பிரபாஸை விட பல மடங்கு அதிகம்..

Latest Videos

click me!