Vijay - Trisha : சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?

Published : May 06, 2026, 12:14 PM IST

Age Difference Between Vijay - Trisha : நடிகர் விஜய்யும் நடிகை த்ரிஷாவும் திரையில் சக்சஸ்ஃபுல் ஜோடியாக வலம் வந்தனர், தற்போது அவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Vijay and Trisha Age Gap

கோலிவுட்டில் இப்போதைக்கு பரபரப்பா பேசப்படுற ஹாட் டாபிக், 'தளபதி' விஜய் மற்றும் 'சவுத் குயின்' த்ரிஷா கிருஷ்ணன் இவங்களோட நட்புதான்! ஆமாங்க, ஒரு பக்கம் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' கட்சியை ஆரம்பிச்சு அரசியல் களத்தில் அதகளம் பண்ணிட்டு இருக்கார். இன்னொரு பக்கம், சோஷியல் மீடியாவில் இவங்க ரெண்டு பேரும் டேட்டிங்ல இருக்காங்கன்னு வதந்திகள் காட்டுத்தீயா பரவிக்கிட்டு இருக்கு. ஆனால் அதுபற்றி அவர்கள் இருவரும் வாய்திறக்காமல் சைலண்டாக உள்ளனர்.

25
விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் த்ரிஷாவா?

தளபதி விஜய், தன்னோட 30 வருஷ சினிமா கெரியரை ஓரங்கட்டிட்டு, 'தமிழக வெற்றி கழகம்' (TVK) கட்சி மூலமா அரசியலுக்கு என்ட்ரி கொடுத்திருக்கார். முதல் எலெக்‌ஷனிலேயே விஜய் காட்டிய பவரைப் பார்த்து எதிர்க்கட்சிகளே மிரண்டு போயிருக்காங்க. ஆனா, இந்த வெற்றிக்கு நடுவுல எல்லாரோட கண்ணும் நடிகை த்ரிஷா மேலதான் இருக்கு! விஜய்யோட ஒவ்வொரு வெற்றியையும் த்ரிஷா கொண்டாடுற விதத்தைப் பார்த்து, "இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ இருக்கு!"ன்னு ரசிகர்கள் பேச ஆரம்பிச்சிட்டாங்க. இந்த எலெக்‌ஷன் ரிசல்ட் வந்தப்போ கூட விஜய்யை வாழ்த்த முதல் ஆளாக தளபதி வீட்டுக்கு ஓடோடி வந்தது த்ரிஷா தான்.

35
விஜய் - த்ரிஷா வயசு வித்தியாசம்

இந்த ஜோடி ஒண்ணு சேரப்போறாங்கன்னு செய்தி பரவுனதும், மக்கள் இவங்க ரெண்டு பேரோட வயசு வித்தியாசத்தை கூகுள்ல தேட ஆரம்பிச்சிட்டாங்க. 1974-ல் பிறந்த விஜய்க்கு இப்போ 51 வயசு. அரை சதம் அடிச்சாலும், இன்னைக்கும் காலேஜ் பையன் மாதிரிதான் இருக்கார்! 1983-ல் பிறந்த த்ரிஷாவுக்கு இப்போ 43 வயசு ஆகுது. அப்படின்னா, விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் கிட்டத்தட்ட 8 வயசு வித்தியாசம் இருக்கு. வயசு என்னவா இருந்தாலும், இன்னைக்கும் இவங்களோட ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி, புது ஜோடிகளுக்கே டஃப் கொடுக்குது.

45
கில்லியில் ஆரம்பித்த மேஜிக்

2004-ல் வந்த 'கில்லி' படம் ஞாபகம் இருக்கா? அந்தப் படத்தோட 'அப்படிப் போடு' பாட்டுக்கு தென்னிந்தியாவே ஸ்டெப் போட்டது. அங்க ஆரம்பிச்ச இந்த ஜோடியோட கிரேஸ், 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' படங்கள் மூலமா தொடர்ந்தது. சமீபத்தில் 'லியோ' படத்தில் மீண்டும் இவங்களைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போனார்கள். அப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்திருந்தார் த்ரிஷா.

55
சங்கீதாவுடன் விவாகரத்து

இன்னொரு பக்கம், விஜய் தன்னோட மனைவி சங்கீதா கிட்ட இருந்து விவாகரத்து பெற உள்ள செய்தி காட்டுத்தீயா பரவுது. கடந்த சில ஆண்டுகளாக விஜய் உடன் பொது நிகழ்ச்சிகளில் சங்கீதா கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீத நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்கு இடையே த்ரிஷாவின் தொடர் பிரசன்ஸும் கிசுகிசுகளுக்கு எண்ணெய் ஊத்துற மாதிரி ஆகிடுச்சு. ஆனா, இதுபத்தி விஜய்யோ, த்ரிஷாவோ அதிகாரப்பூர்வமா எதுவும் சொல்லல. அரசியலில் கலக்கிட்டு இருக்கிற விஜய்யும், லேடி சூப்பர் ஸ்டார் த்ரிஷாவும் நிஜமாவே ஒண்ணு சேருவாங்களா? இல்ல இதெல்லாம் வெறும் 'ரீல்' நியூஸா? இதுக்கு காலம்தான் பதில் சொல்லணும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories