திரும்பிய இடமெல்லாம் பனி... வாவ் என்ன ஒரு அழகு..! இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்

Published : Feb 10, 2023, 02:31 PM IST

லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஷ்மீரில் தனது டீமுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

PREV
15
திரும்பிய இடமெல்லாம் பனி... வாவ் என்ன ஒரு அழகு..! இணையத்தில் வைரலாகும் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், வசந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

25

லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் முதற்கட்டமாக நடந்தது. இதையடுத்து மூணாறில் சில காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது முக்கிய காட்சிகளை படமாக்க காஷ்மீருக்கு சென்றுள்ளனர். அங்கு 2 மாதங்கள் தங்கி படப்பிடிப்பை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பும் படு ஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

45

இந்நிலையில், காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வந்தாலும், லியோ படத்தின் படப்பிடிப்பு எந்தவித தடங்கலும் இன்றி படு ஜோராக நடைபெற்று வருகிறதாம். தினசரி 500-க்கும் மேற்பட்டவர்களின் கடினமான உழைப்புடன் இப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறதாம். லியோ படக்குழுவினர் அங்கு எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

55

அந்த வகையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டீமுடன் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதையடுத்து படத்தின் டெக்னீஷியன்கள் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோக்களும் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்களின் பின்னணியில் பனி சூழ செம்ம அழகாக காட்சியளிக்கிறது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  பிக்பாஸ் கவின் கலக்கினாரா? சொதப்பினாரா?... டாடா படம் எப்படி இருக்கு? - முழு விமர்சனம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories