பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுகிறதா? தீயாய் பரவும் தகவல்... பின்னணி என்ன?

பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த உண்மை நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.

Is Maniratnam Magnum opus movie ponniyin selvan 2 release date changed here the truth

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து திரைப்படம் எடுக்க பல இயக்குனர்கள் முயன்றனர். ஆனால் இறுதியில் மணிரத்னம் தான் அதனை சாத்தியமாக்கி காட்டினார். அவர் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் ரிலீசாகி அமோக வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி வசூலையும் வாரிக் குவித்தது.

Is Maniratnam Magnum opus movie ponniyin selvan 2 release date changed here the truth

லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் கலெக்‌ஷனை அள்ளியது. கடந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையையும் படைத்தது. இப்படத்தில் சரத்குமார், பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், கிஷோர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

Tap to resize


பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதால் தற்போது பின்னணி பணிகள் மட்டுமே எஞ்சி உள்ளன. அதுவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்படத்தை வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... சீதா ராமம் நாயகியா இது?... கவர்ச்சியில் மிரட்டும் மிருணாள் தாக்கூரின் கிக்கான கிளாமர் போட்டோஸ் இதோ

இதனிடையே நேற்று திடீரென பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய தாமதம் ஆவதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பொன்னியின் செல்வன் 2 அறிவித்தபடி வெளியாகும் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த மாதம் முதல் பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த மாதம் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும், அடுத்த மாத முதல் வாரத்தில் டீசர், அடுத்த மாத இறுதியில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவும் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். ஏப்ரல் மாதம் முழுவதும் அனைத்து நடிகர்களையும் வைத்து புரமோட் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... கே.ஜி.எஃப் 2 படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை அசால்டாக அடிச்சுதூக்கி வசூலில் நம்பர் 1 இடம்பிடித்த பதான்

Latest Videos

click me!