ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்திருந்தார். ஜான் ஆபிரஹாம் வில்லனாக மிரட்டியிருந்த இப்படம் உலகளவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ரிலீஸுக்கு முன் இப்படத்திற்கு எதிராக பாய்காட் சர்ச்சையும், வெடித்ததால் அது வசூலை பாதிக்கும் என கூறப்பட்டது.