சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வருபவர் TTF வாசன். இவர் பைக் ரைடிங் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பேமஸ் ஆனார். இதன் காரணமாக இவருக்கு யூடியூப்பில் 30 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் எந்த அளவுக்கு பிரபலம் ஆனாரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். கடந்தாண்டு பிக்பாஸ் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் அதிவேகமாக சென்று வீடியோ வெளியிட்டு இருந்தார் TTF வாசன்.