அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு கையில் கிடைத்தும் நழுவியது. இதற்க்கு அஜித்திடம் இருக்கும் இந்த ஒரு பழக்கம் தான் என கூறப்படுகிறது.
அஜித் பல படங்களில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளதால், நயன் சக நடிகை என்பதை தாண்டி, இருவருக்குள்ளும் நல்ல நட்பும் இருந்தது. எனவே தான் நயன் - விக்கி திருமணத்தின் போது தான் பைக் ரெய்டில் பிசியாக இருந்தாலும்... தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையும் திருமணத்திற்கு அனுப்பி வைத்தார்.
27
மேலும் நயன்தாரா அஜித்திடம் தன்னுடைய கணவர் இயக்கத்தில் நடிக்கும் படி கேட்டு கொண்டதால் தான் அஜித் தன்னுடைய அடுத்த படத்தை விக்னேஷ் சிவனுக்கு கொடுக்கவும் ஒப்புக்கொண்டார்.
துணிவு பட நேரத்தில், விக்னேஷ் சிவனை சந்தித்து பேசிய அஜித்... அவர் கூற வந்த கதையை கேட்காமல், ஒன் லைன் மட்டும் சொல்லுங்கள் என கேட்க, விக்கி சொன்ன ஒன் லைன் பிடித்து போனதால் படத்தில் நடிக்கவும் ஓகே சொல்லி மகிழ்ச்சியாக அனுப்பி வைத்துள்ளார்.
47
தன்னுடைய பட பணிகள் அனைத்தையும் முடித்த பின்னர் தான்.. விக்கி சொன்ன முழு கதையும் கேட்டுள்ளார். விக்கி சொன்ன கதை அஜித்துக்கு மட்டும் அல்ல பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் திருப்திகரமாக அமையவில்லை. பின்னர் இந்த கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய சொல்லியும், விக்கி கூறிய கதை தனக்கு செட் ஆகாது என கூறி தன்னுடைய 62 ஆவது படத்தை இயக்கம் வாய்ப்பை தற்போது மகிழ் திருமேனிக்கு கொடுத்துள்ளார்.
ஏற்கனவே, எச்.வினோத் கூறிய ஒன் லைன் பிடித்து போகவே தான் அந்த படத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ஒன் லைனில் கூறிய காட்சி படத்தில் இல்லவே இல்லை எனவும் சில ரசிகர்கள் கூறி இருந்தனர்.
67
இப்படி இருக்க, ஒரு இயக்குனரிடம் முழு கதையும் கேட்காமல்... ஓகே கூறி, ஆசை காட்டி ஏமாத்தியது போல் ஆகிவிட்டது. ஆனால் தளபதி விஜய்யை பொறுத்தவரை, எந்த இயக்குனராக இருந்தாலும் ஆரம்பத்திலேயே முழு கதையும் கேட்டு, அந்த கதை தன்னுடைய மனதிற்கு திருப்திகரமாக இருந்தால் மட்டுமே ஓகே சொல்வர்.
எனவே அஜித் இந்த ஒன் லைன் கேட்டு முடிவு செய்யும் பழக்கத்தை மாற்றினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நயன்தாராவின் பொல்லாப்புக்கும் ஆளாகாமல் இருந்திருப்பார் என கூறப்படுகிறது.