நடிகர் விஜய்யும், அஜித்தும் தமிழ்சினிமாவில் சமகால நடிகர்களாக பார்க்கப்படுகிறார். பொது வாழ்வில் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், சினிமாவைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் போட்டியாளர்கள் தான். இருவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது விஜய் நடித்துள்ள வாரிசு படமும் அஜித் நடித்துள்ள துணிவு படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது.
இவ்வாறு இரு நடிகர்களுக்கு இடையேயான போட்டி சூடுபிடித்துள்ள இந்த வேலையில், இருவரும் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விஜய் வாரிசு படத்துக்காக முதல் ரூ.120 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு போட்டியான நடிகராக அஜித் கருதப்பட்டாலும், அவரின் சம்பளம் விஜய்யுடன் ஒப்பிடும் போது மிகவும் கம்மி தானாம்.
அதன்படி துணிவு படத்துக்காக நடிகர் அஜித் ரூ.70 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித் இந்த அளவு கம்மியாக சம்பளம் வாங்கியதற்கு காரணம் அவர் நேர்கொண்ட பார்வை படம் முடித்த பின் வலிமை மற்றும் துணிவு படங்களில் நடிப்பதை உறுதி செய்துவிட்டாராம். 3 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த படத்தின் சம்பளம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். ஆனால் தற்போது அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள ஏகே 62 படத்துக்காக ரூ.105 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லனு சொன்னீங்க... அப்போ இது என்ன? - துணிவு படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்