கனவு நிஜமாகி விட்டது... தளபதியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பூரித்து போன செம்பருத்தி ஷபானா!

First Published | Dec 26, 2022, 11:54 PM IST

சீரியல் நடிகை ஷபானா தளபதி விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக போட்டுள்ள பதிவு, தற்போது வைரலாகி வருகிறது.
 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியலில் ஹீரோயினாக நடித்தவர் ஷபானா. இந்த சீரியலில், பிரியா ராமன், அக்னி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், 3 வருடங்களை கடந்து ஒளிபரப்பாகி வந்த நிலையில், சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

இந்த சீரியலில், செம்பருத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷபானா. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியல் நடித்து வந்த ஆரியனை திடீரென திருமணம் செய்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Tap to resize

பெற்றோர் விருப்பத்தை மீறி நடந்தாக கூறப்படும் இவர்களது திருமணம், மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்தில் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள், மற்றும் ஆர்யன் - ஷபானா ஆகியோரின் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருமணமான சில மாதங்களிலேயே இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய உள்ளதாகவும் சில வதந்திகள் பரவிய நிலையில், இதற்கு ஷபானா விளக்கப்படுத்த முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ஷபானா, விக்ரம் பிரபு நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த 'வாரிசு' படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட ஷபானா, தளபதி விஜய் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். விஜய்யை நேரில் பார்த்ததால் தன்னுடைய கனவு நிறைவேறி விட்டதாக இவர் போட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!