விஜய் டிவியின் செல்ல பிள்ளையான டிடி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளதன் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் இவருடைய கியூட் ஸ்மைல், பரபரப்பாக பேசும் தன்மை, கலகலப்பான சுபாவம், என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தவை.
27
அதே போல் தனக்கு ஏற்ற போல் உடை மற்றும் நகைகள் அணிந்து, இவர் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஸ்டைலாகவும், ட்ரடிஷனலாகவும் தொகுத்து வழங்குவது, தொகுப்பாளராக மாற வேண்டும் என்கிற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக பலர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
டிடி என ரசிகர்களால் அழைக்கப்படும் திவ்யா தர்ஷினி, தொலைக்காட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர், இவருடைய சகோதரி பிரியதர்ஷினி தான். இவர் ஒரு தொகுப்பாளராக அறிமுகமாகி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளது மட்டுமின்றி, சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
47
டிடி தன்னுடைய நண்பர், ஸ்ரீகாந்த் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணம் ஆன சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் விவாகரத்துக்கு காரணம் டிடி அதிகமாக நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும், ஆண் நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகுவது தான் என கூறப்பட்டது.
இந்நிலையில், கணவர் ஸ்ரீகாந்த்திடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், டிவி நிகழ்ச்சியிலும், திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வரும் டிடி, பா.பாண்டி, துருவ நட்சத்திரம், போன்ற சில படங்களிலும் நடித்தார். பின்னர் காலில் அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாகவும், ஆட்டோ இம்மியூன் பிரச்னையாலும் பாதிக்கப்பட்டு சில காலம், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் இருந்து வருகிறார்.
67
அவ்வப்போது முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே, தொகுத்து வழங்கி வருவதோடு... முன்னணி நடிகர் - நடிகைகளை மட்டுமே பேட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில்... சமீபத்தில் கூட கனெக்ட் படத்திற்காக, நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்தது, மிகவும் பிரபலமானது.
டிடி விவாகரத்துக்கு பின்னர், தன்னுடைய பெற்றோருடன் வாழ்ந்து வரும் நிலையில், டிடி-க்கு இரண்டாவது திருமணம் செய்ய, அவருடைய வீட்டில் முழு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்.. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை இவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பிரபலங்கள் குறித்து அவ்வப்போது வதந்திகள் வெளியாவது சகஜம் தான், என்பதால்... இதுவும் வழக்கம்போல் வதந்தியா? அல்லது இந்த தகவலில் உண்மை உள்ளதா? என்பது குறித்து டிடி விரைவில் தன்னுடைய சமூக பணணிதளம் மூலம் தெளிவு படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.