நடிகர் அஜித்தின் 61-வது படம் துணிவு. இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். அஜித்தை வைத்து இவர் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகி இருந்தன. இந்த இரண்டு படங்களையும் தயாரித்த போனி கபூர் தான் துணிவு படத்தையும் தயாரித்துள்ளார்.
துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. வழக்கம்போல் இந்த படத்தின் புரமோஷனிலும் தான் கலந்துகொள்ள மாட்டேன் என்பதை திட்டவட்டமாக அறிவித்துவிட்டார் நடிகர் அஜித்குமார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லனு சொல்லீட்டு பறந்து பறந்து புரமோஷன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அப்போ துணிவு நல்ல படம் இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் அஜித்தின் மேலாளர் பதிவிட்ட டுவிட்டை குறிப்பிட்டு மீம்ஸ்களும் போடப்பட்டு வருகின்றன.