அடுத்தடுத்து லீக்காகும் சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..அப்செட் ஆன விஜய் 66 படக்குழு!

Kanmani P   | Asianet News
Published : Jun 12, 2022, 01:25 PM ISTUpdated : Jun 12, 2022, 01:27 PM IST

விஜய் 66 படத்திலிருந்து சண்டை காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நாயகன், நாயகி இருவரும் உள்ளனர். 

PREV
14
அடுத்தடுத்து லீக்காகும் சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்..அப்செட் ஆன விஜய் 66 படக்குழு!
Vijay 66

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் 66 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சமீபத்திய செட்யூல்  ஹைதராபாத்தில் முடித்ததை தொடர்ந்து தமிழ்-தெலுங்கு என பன்மொழித் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்புத்தளத்தில்  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் இணையம் வெளியாகி படக்குழுவினருக்கு ஷாக் கொடுத்து வருகிறது.. 

24
VIJAY 66

அதன்படி தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் விஜய் நீல நிற டி-சர்ட்டுக்கு மேல் வெளிர் பழுப்பு நிற சட்டை அணிந்திருந்தார். கசிந்த புகைப்படங்களின்படி, 'தளபதி 66' படக்குழுவில் நடிகை குஷ்பு புதிதாக இணைந்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. சென்னையில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் பிரமாண்டமான அமைக்கப்பட்டுள்ள செட்டில் அடுத்த சில வாரங்களுக்கு படக்குழு படப்பிடிப்பை நடத்தவுள்ளது.

34
Thalapathy Vijay

 'தளபதி 66' படத்தில் யோகி பாபு, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். மேலும் இது ஒரு குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என ஏற்கனவே இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

44
vijay 66 spot photos

இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது எ. அதில் நீல நிற கோர்ட் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய் மற்றும் குட்டை கவுனில் ரஷ்மிகா உள்ளார். புகைப்படத்தின் படி அது ஒரு சண்டை காட்சிக்கான அமைப்பு என தெரிகிறது. ஆதாரங்களின் படி ஒரு நர்சரியில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியாகும். அங்கு ரஷ்மிகா சில செடிகளை வாங்க விரும்புகிறார். அப்போது விஜய் நாயகியை துஷ்பிரயோகம் செய்பவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories