'சிவாஜி முதல் விக்ரம் வரை'..பாக்ஸ் ஆபிஸ் புழுதியை கிளப்பிய ஐந்து படங்கள்

Kanmani P   | Asianet News
Published : Jun 11, 2022, 08:10 PM IST

கமலின் 'விக்ரம்' முதல் ரஜினியின் 'சிவாஜி' வரை பாக்ஸ் ஆபிஸில் சிறந்து விளங்கிய ஐந்து படங்கள் லிஸ்ட் இதோ..

PREV
15
'சிவாஜி  முதல் விக்ரம் வரை'..பாக்ஸ் ஆபிஸ் புழுதியை கிளப்பிய ஐந்து படங்கள்
sivaji the boss

ரஜினியின் சிவாஜி :

'சிவாஜி' படத்திற்காக ரஜினிகாந்த் முதன்முறையாக இயக்குனர் ஷங்கருடன் கைகோர்த்தார். பிரமாண்ட இயக்குனர் என பெயர் போன இயக்குனர் உருவாக்கத்தில் சிவாஜி நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கமர்ஷியல் நாடகம் எதிர்பார்த்த வசூலை விட சிறப்பாக செயல்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் சிறந்த படமாக அமைந்தது. 60 கோடி பட்ஜெட்டில் எம்.எஸ்.குகன், எம்.சரவணன் கூட்டு தயாரிப்பான இந்த படம் ரூ. 152 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.

25
singam movie

சூர்யாவின் 'சிங்கம்' :

ஹரி - சூர்யா கூட்டணி பட்டையை கிளப்பிய படம் சிங்கம் போலீஸ் த்ரில்லராக வெளியான 'சிங்கம்'  நாடு தழுவிய வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் 100 கோடி ரூபாய்க்கு அருகில் வசூலித்துசூர்யாவின்  மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது.. ஆனால், சூர்யா 100 கோடி வசூலை எட்டுவதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை 'சிங்கம் 2' அதை எளிதாகச் செய்தது.

35
thuppakki

விஜயின் 'துப்பாக்கி' :

2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி விஜயின் அப்போதைய தோல்விகளுக்கு மருந்தாக இருந்தது. அதிரடி நிரம்பிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'துப்பாக்கி' விஜய்யின் முதல் 100 கோடி படமாகவும் மாறியது. ரூ.125 கோடியை வசூலித்த துப்பாக்கி படத்திற்குப் பிறகு விஜயின் பாக்ஸ் ஆபிஸ் அச்சிவ் மிக எளிதானது.

45
DON

சிவகார்த்திகேயனின் டான் : 

சிவகார்த்திகேயன் 'டான்' மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படம் அவரது முதல் 100 கோடி வசூலாக மாறியது.  'டான்' திரைப்படம் ஒரு அறிமுக இயக்குனராந சிபி சக்கரவர்த்தி என்பவரால் இயக்கப்பட்டதால் குறைவான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் கதைக்கருவும் சாதாரணமானது. ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது. ஏனெனில் முந்தைய படமான 'டாக்டர்' படத்தை விட பெரிய வெற்றியாக மாறியது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயனின் சிறந்த படமாக 120 கோடி ரூபாய் வசூல் செய்தது.

55
VIKRAM

கமல் ஹாசனின் விக்ரம் :

'விக்ரம்' படத்திற்காக கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்தார். அதிரடி நாடகம் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த படமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளமே ஒன்றிணைந்து இருந்தது. ஆனால் பல இடங்களில் பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் நம்பர் 1 தமிழ் படமாக மாறியது. ஒரு வாரத்தில் விக்ரம் தமிழ்நாட்டில் ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டது. இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடியை நெருங்கி வருகிறது.
 

Read more Photos on
click me!

Recommended Stories