தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 'ஹே சினாமிகா ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இந்த படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.. இந்த படம் வெளியாகி மிதமான வரவேற்பை பெற்றது.