திரையுலக பிரபலமான டி. ராஜேந்தர் இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பான் முகம் கொண்டவர். இவரது மகன் சிம்பு முன்னணி நடிகராக உள்ளார். சினிமாவில் புகழ் பெற்ற போதிலும் இவரது வாழ்க்கை இன்னும் செட்டில் ஆகவில்லை இவரது தம்பி , தங்கை இருவரும் அவரவர்களுக்கென குடும்பங்களை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் சிம்புவுக்கு மணப்பெண் இன்னும் சிக்கவில்லை. இது போன்ற காரணங்களால் சமீபகாலாமா மன உளைச்சலில் இருந்த டி ராஜேந்தர் அவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டி . ஆர் - யை தமிழக முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்து இருந்தார்.