நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள விவகாரம் மிகப்பெரிய விவாதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், விக்னேஷ் சிவனின் உறவினர்களையும் கோபப்படுத்தியுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணம் ஆகி நான்கு மாதமே ஆகும் நிலையில், இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்ததை தொடர்ந்து இந்த விஷயம், பல்வேறு விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு வேளை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அவசியமாக இருந்தால், அதற்கு சில விதிமுறைகளும் உள்ளது. திருமணமாகி ஐந்து வருடங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும், அதேபோல் திருமணம் ஆன கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே இந்த முறை இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் திருமணம் ஆகிய நான்கே மாதத்தில் அதுவும் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள விவகாரம். சமூக வலைதளத்தில் மட்டுமின்றி கோலிவுட் திரை உலகிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: Rahul Koli Death: அதிர்ச்சி... 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் அதிர்ச்சி மரணம்..!
அதே நேரம் விதிமுறைகளை பின்பற்றி விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார்களா? அல்லது விதிமுறை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து, இது குறித்து எந்த ஒரு விளக்கமும் தற்போது வரை வெளியாகாத நிலையில், நயன் - விக்கி செயலால் வெளியில் தலை காட்ட முடியவில்லை என விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் என்பவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெற்ற போது, விக்கியையும் அவரது தங்கை ஐஸ்வர்யாவையும் சிறு வயதில் இருந்து வளர்த்தவர்கள் நாங்கள் தான் என கூறிய பெரியப்பா மற்றும் பெரியம்மா, ஒரு நடிகையை விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டுள்ளதால் தங்களை கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை என வேதனையாக பேசி இருந்தனர்.
தற்போது திருமணமான 4 மாதத்தில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு குழந்தை பிறந்தது குறித்து... தங்களை பலர் பல்வேறு கேள்விகள் கேட்டு வருவதாகவும், இதனால் வெளியே தலை காட்ட முடியவில்லை என்றும் இதன் காரணமாக வெளியே செல்வதை குறைத்து கொண்டுள்ளோம் என கூறியுள்ளனர். ஏற்கனவே ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டதால்தான் விக்னேஷ் சிவன் தங்களை திருமணத்திற்கு கூட அழைக்கவில்லை என தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்த இவர்கள் தற்போது பழைய கோபத்தை இதிலும் காட்டியுள்ளார்களா? என சில விமர்சனமும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: வாடகை தாய் மூலம் குழந்தை... நயன்தாராவிடம் விசாரிக்கப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்