வாடகைத் தாய் தடைச் சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு பாதிப்பில்லை - அடித்து சொல்லும் சட்ட வல்லுநர்கள்

First Published Oct 11, 2022, 2:56 PM IST

வாடகைத் தாய் தடை சட்டத்தால் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு குழந்தை பிறந்தது பற்றி தான். அவர்கள் திருமணமான நான்கே மாதத்தில் பெற்றோர் ஆனதும், அதுமட்டுமின்றி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதும் தான் இந்த சர்ச்சைகளுக்கு காரணம். சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் பேசு பொருள் ஆகி உள்ளது.

குழந்தை பிறந்ததை அறிவித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா, அதன்பின் எழுந்த சர்ச்சைகளுக்கு எந்தவித விளக்கமும் அளிக்காமல் இருந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்த விவகாரம் பூதாகரமாகி வருகிறது. ஒருசிலரோ அவர்கள் வாடகைத் தாய் தடை சட்டத்தை மீறிவிட்டதாகவும், இதனால் கைது செய்யப்படலாம் என்கிற ரேஞ்சுக்கு பேசி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் வாடகைத் தாய் தடை சட்டம் அமலுக்கு வந்ததால் நிச்சயம் நயன் - விக்கி ஜோடி சிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் உண்மையில் இது ஒரு பிரச்சனையே இல்லை என்பது தான் சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. வாடகைத் தாய் தடை சட்டத்தால் விக்கி - நயன் ஜோடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்கிறனர்.

இதையும் படியுங்கள்... 4 மாதத்தில் குழந்தை... இதே மாதிரி அஜித் படத்தையும் பாஸ்ட்டா ரிலீஸ் பண்ணிடுங்க விக்கி - அஜித் ரசிகர் கோரிக்கை

அது எப்படி என்றால், கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி வாடகைத் தாய் தடை சட்டம் பற்றிய அறிவிப்பு வந்தாலும், அந்த சட்ட விதிகள் அமலுக்கு வந்தது ஜூன் மாதம் 26-ந் தேதி தான். விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி அதற்கு முன்னரே அதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுவிட்டதால் , அவர்களுக்கு இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வதை வணிகரீதியாக செய்து வந்துள்ளனர். அதனைத் தடுக்கவே வாடகைத்தாய் நெறிப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளதாம். ஆதலால் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தை பிறந்த விவகாரத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படியுங்கள்... வாடகை தாய் மூலம் குழந்தை... நயன்தாராவிடம் விசாரிக்கப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

click me!