Vignesh shivan : நயன்தாரா உடனான திருமணம் கிறிஸ்தவ முறைப்படியா?... இந்து முறைப்படியா? - விக்னேஷ் சிவன் விளக்கம்

Published : Jun 07, 2022, 02:03 PM IST

Vignesh shivan - Nayanthara Wedding : விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இந்து முறைப்படி நடக்குமா அல்லது கிறிஸ்தவ முறைப்படி நடக்குமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. 

PREV
14
Vignesh shivan : நயன்தாரா உடனான திருமணம் கிறிஸ்தவ முறைப்படியா?... இந்து முறைப்படியா? - விக்னேஷ் சிவன் விளக்கம்

அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தான். 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். வருகிற ஜூன் 9-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.

24

இவர்களது திருமணம் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இருப்பினும் இதையடுத்து நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித், விஜய், ரஜினி போன்ற திரையுலக பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

34

நடிகை நயன்தாரா கிறிஸ்தவர், இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடக்குமா அல்லது கிறிஸ்தவ முறைப்படி நடக்குமா என்கிற குழப்பம் நீடித்து வந்தது. இன்று காலை திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

44

இதற்கு பதிலளித்த அவர் இந்து முறைப்படி தான் திருமணம் நடைபெறும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி திருமணம் முடிந்ததும் அன்று மதியம் தங்களது திருமண புகைப்படத்தை வெளியிடுவோம் எனவும், ஜூன் 11-ம் தேதி நயன்தாராவுடன் சேர்ந்து வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்... நயன்தாரா திருமணத்துக்காக கடற்கரையில் இப்படி ஒரு பிரம்மாண்ட செட்டா.. ஷங்கர் படத்தையே மிஞ்சிடுவாங்க போல

Read more Photos on
click me!

Recommended Stories