நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. முதலில் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த அந்த ஜோடி, அங்கு அனுமதி கிடைக்காததால் மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரம் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.