செண்டிமெண்டை தொடர்ந்து வில்லனாகும் விஜய்..கதையை சூசகமாக போட்டுடைத்த லோகேஷ்..

Kanmani P   | Asianet News
Published : Jun 07, 2022, 12:59 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கிடையே விஜய 67 குறித்து லோகேஷ் பேசிய குறிப்பும் வைரலாகி வருகிறது.

PREV
15
செண்டிமெண்டை தொடர்ந்து வில்லனாகும் விஜய்..கதையை சூசகமாக போட்டுடைத்த லோகேஷ்..
lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் குறிகிய காலத்தில் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் முன்னணி இயக்குனரானவர். தனது பயணத்தை மாநகரம் என்னும் சின்ன பட்ஜெட் படம் மூலம் ஆரம்பித்த இவருக்கு அடுத்தாக ஜேக்பாட் கிடைத்தது. கார்த்தியை வைத்து டார்க் ஆக்சன் மூவியாக கைதியை இயக்கினார். நோ சாங், நோ பிஜியம் என வித்யாசமான படைப்பை கொடுத்து தன கால் தடத்தை முதல் 10 இயக்குனர்களும் ஒருவராக ஊன்றினார் லோகேஷ்.

25
MASTER

கைதியை தொடர்ந்து விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைத்தது கைதியை கார்த்தியை வித்யாசமான ஜோனரில் காட்டிய இயக்குனர் . வழக்கமான நம்ம ஊர் தளபதியை குடிகார வாத்தியாராக காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார். மாளவிகா மோகன் கதாநாயகியாக இருந்த போதிலும் கைதியை போல இதிலும் ரோமன்ஸ், டூயட் என எதற்கும் இடமியின்றி முழு நேர ஆக்சனாக இருந்தது. இதில் வில்லனாக விஜய் சேதுபதி நாயகனையே தூக்கி சாப்பிட்டு விட்டதாகவே ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டி தள்ளினர். 

35
Lokesh Kanagaraj

மாஸ்டர் வெற்றியை கொடுத்த பரிசாக கமலின் கிப்ட் கிடைத்தது. கமல் நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு தனதே தயாரிப்பதாகவும் கூறி அதிர்ஷ்ட வாய்ப்பை லோகேஷுக்கு கொடுக்க 4 வருட முயற்சியாக பெரும் பொருட்செலவில் விக்ரம் உருவானது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பெரிய நட்சத்திர கூட்டத்தின் ஒளியில் விக்ரம் மின்னும் விக்ரம் வசூலை வாரி குவித்து வருகிறது.

45
lokesh kanagaraj

இதையடுத்து சூர்யாவை வைத்து விக்ரம் தொடர்ச்சி, மற்றும் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் மீண்டும் விஜயுடன் என கலக்கும் இவர் கை வசம் ஏற்கனவே இரும்பு கை மாயாவி, கைதி 2 உள்ளது. இந்நிலையில் விஜய் 67 படத்தை லோகேஷ் முதலில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரம் ப்ரோமோஷன் இன்டெர்வியூவில் இதை உறுதி செய்த இயக்குனர் அந்த படத்தின் கதையையும் சூசகமாக கூறியிருந்தார்.

55
lokesh kanagaraj

தற்போது விஜய் 66 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் லோகேஷ் கனகராஜுடன் அடுத்த படத்தில் விஜய் இணைவார் என தெரிகிறது. இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாக கூறிய லோகேஷ், விஜய்க்கு வில்லனாக நடிப்பது மிகவும் பிடிக்கும் கூறியிருந்தார். இதன் மூலம் முழு நீள செண்டிமெண்ட் படமாக உருவாகி வரும் விஜய் 66 படத்தை அடுத்து கேங்ஸ்டாராக 67 படத்தில் தளபதி வருவது உறுதியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories