Don : டான் எனக்கு வந்த படம்... அந்த ஒரு காரணத்துக்காக நடிக்க மறுத்தேன் - சக்சஸ் மீட்டில் ஷாக் கொடுத்த உதயநிதி

Published : Jun 07, 2022, 09:15 AM IST

Don Success Meet : டான் படம் டாக்டர் பட கலெக்‌ஷனை முந்தும்னு ஆடியோ லாஞ்ச்ல சொன்னேன். அதுமாதிரியே நடந்திருச்சு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
14
Don : டான் எனக்கு வந்த படம்... அந்த ஒரு காரணத்துக்காக நடிக்க மறுத்தேன் - சக்சஸ் மீட்டில் ஷாக் கொடுத்த உதயநிதி

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் டான். இப்படம் வெளியான மூன்றே வாரங்களில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இப்படத்தின் வெற்றிகரமாக 25வது நாளை கடண்ட நிலையில் நேற்று சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இப்படத்தை வெளியிட்ட உதயநிதி மற்றும் டான் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

24

இதில் பேசிய உதயநிதி, இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் எனக்கூறி அதிர்ச்சி கொடுத்தார். அவர் பேசியதாவது : டான் படம் டாக்டர் பட கலெக்‌ஷனை முந்தும்னு ஆடியோ லாஞ்ச்ல சொன்னேன். அதுமாதிரியே நடந்திருச்சு. மூன்றே வாரத்தில் அந்த சாதனையை முறியடித்துள்ளது டான். இது சக்சஸ் மீட் என்பதால் நிறைய உண்மைகளை சொல்லலாம் என நினைக்கிறேன்.

34

டான் படத்தை ரெட் ஜெயண்டை சேர்ந்த நாங்கள் இரு நாலு பேர் முதலில் பார்த்தோம். படத்தின் முதல் பாதியைப் பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டோம். இந்த காமெடிக்கு சிரிப்பு வருதானு நாங்களே கேட்டுக்கொண்டோம். பின்னர் இரண்டாம் பாதியை பார்த்தபோது அந்த கடைசி ஒரு மணிநேரம் வரும் அப்பா - மகன் செண்டிமெண்ட் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது.

44

அதைப்பார்த்த உடன் இந்த படம் நிச்சயம் ஓடும் என சொன்னேன். சொன்னதைப் போலவே ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி உள்ளனர். இன்னொரு உண்மையை சொல்றேன், இந்த படத்தோட கதையை கேட்டு ஒரு ஹீரோ நடிக்க மறுத்திருக்கிறார். அந்த ஹீரோ நானே தான். இந்தக்கதை எனக்கு பிடிச்சிருந்தது. ஆனால் பள்ளிப்பருவ காட்சிகளில் என்னால் நடிக்க முடியாது எனக்கூறி நோ சொல்லிட்டேன். இதைக்கேட்டு ஷாக் ஆன சிவகார்த்திகேயன், இதை டைரக்டர் என்கிட்ட சொல்லவே இல்லையே சார் எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்...  Lokesh kanagaraj : கமல் கைப்பட எழுதிய ‘லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்’.... லோகேஷின் எமோஷனல் பதிவு

Read more Photos on
click me!

Recommended Stories