நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்... அதன் விலை 10 கோடியாம்..!

Published : Nov 19, 2025, 10:07 AM IST

நடிகை நயன்தாரா நேற்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் காஸ்ட்லியான கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

PREV
14
Vignesh Shivan Gifted Rolls Royce Spectre Car To Nayanthara

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் விக்னேஷ் சிவன் - நயன்தாரா. இவர்கள் இருவரும் சுமார் 7 ஆண்டுகள் காதலித்து, பின்னர் 2022-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர். இவர்களுக்கு உயிர், உலகு என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டார் நயன்தாரா. திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் செம பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார் நயன். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

24
நயன்தாரா பிறந்தநாள்

நடிகை நயன்தாரா நேற்று தன்னுடைய 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்தன. அதுமட்டுமின்றி அவர் நடிக்கும் படங்களில் இருந்து அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகின. குறிப்பாக அவர் தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதுதவிர அவர் நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் இருந்து சிறப்பு போஸ்டர்கள் வெளியிடப்பட்டு நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

34
விக்னேஷ் சிவன் வாழ்த்து

நயன்தாராவின் பிறந்தநாளுக்கு லேட்டாக வாழ்த்து சொன்னாலும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உடன் கூறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அவர் போட்டுள்ள பதிவில், எண்ணம் போல் வாழ்க்கை... என்னுடைய உயிர் நயன்தாராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ பிறந்த தினம்... வரம். என்னுடைய அழகியே உன்னை உண்மையாக, ஆழமாக காதலிக்கிறேன். வாழ்க்கையில் சிறந்த தருணங்களை மட்டும் தர வேண்டும் என கடவுளையும், இந்த பிரபஞ்சத்தையும் வேண்டுகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

44
ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக கொடுத்த விக்கி

இந்த வாழ்த்துக்களோடு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றையும் நயன்தாராவுக்கு பரிசாக வழங்கி உள்ளார் விக்னேஷ் சிவன். அதன்படி ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்கிற விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி உள்ளார் விக்கி. அந்த காரின் விலை ரூ.10 கோடியாம். அந்த காரில் தன்னுடைய இரு மகன்களையும் அமர வைத்து குடும்பத்துடன் சந்தோஷமாக போஸ் கொடுத்துள்ளார்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. அவரின் இந்த பதிவுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories