சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடுமைகள் அனைத்தையும் மீனாவிடம் சொல்லிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதைப் பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன்னுடைய பிளாஷ்பேக் கதையை மீனாவிடம் சொல்லி இருந்தார். தன்னுடைய முதல் கணவர் ஒரு குடிகாரன் என்றும், அவன் தன்னுடைய அனுமதி இல்லாமலே தன்னை தொட்டதாகவும், அவனால் தன்னுடைய வாழ்க்கை நரகமாக இருந்ததாகவும் கூறிய அவர், திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே அவனுடன் வாழ்ந்ததாகவும், அதற்குள் அவன் விபத்தில் இறந்துவிட்டான் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவனுடைய குடும்பத்தார் கர்ப்பமாக இருந்த தன்னை, வீட்டை விட்டே விரட்டி விட்டதாகவும் ரோகிணி கூறி இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
25
ரோகிணியின் சோகக் கதை
இதையடுத்து ஊரைவிட்டே ஓடிவந்த ரோகிணி, படிப்பை தொடர்ந்தாராம். அடுத்த சில மாதங்களில் கிரிஷ் பிறந்ததை அடுத்து அவனுக்காக பார்ட் டைமாக வேலைக்கு சென்று, தன்னுடைய படிப்பையும் தொடர்ந்திருக்கிறார். ஒருவழியாக படிப்பை முடித்து சென்னைக்கு வந்து பார்லரில் வேலைக்கு சேர்ந்த ரோகிணிக்கு வங்கி ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நபர் ரோகிணியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவருடன் நெருங்கிப் பழகிவிட்டு, அவருக்கு குழந்தை இருப்பது தெரிந்ததும் கழட்டிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் நிறைய பேர் ரோகிணிக்கு தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
35
ஃபீல் பண்ணும் மீனா
பார்லர் வேலைக்காக சென்ற நிறைய இடத்தில் ரோகிணியிடம் தவறாக நடக்க முயன்றார்களாம். இதையடுத்து நமக்குனு ஒரு வாழ்க்கை வேண்டும் என முடிவெடுத்த ரோகிணி, மனோஜை திருமணம் செய்ய சம்மதித்து இருக்கிறார். தான் நேசித்த முதல் ஆள் மனோஜ் என்பதால் அவரை திருமணம் செய்தேன். அதனால் தான் மனோஜிடமும் கிரிஷை பற்றிய உண்மைகளை சொல்லவில்லை. நான் சொன்ன பொய்யை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நான் சொன்ன பொய்க்கு ஒரு நியாயம் இருக்கு என சொல்கிறார் ரோகிணி. அவரின் பிளாஷ்பேக் கதையை கேட்டு மீனா எமோஷனல் ஆகிறார்.
இதையடுத்து பேசும் மீனா, உன் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது. உன்மேல நான் பரிதாபப்படுறேன். ஆனால் அதற்காக ஒரு குடும்பத்தை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம். நீ உண்மையை மறைப்பதற்கு உன் பக்கம் ஆயிரம் நியாயம் இருக்கு. ஆனா எனக்கு தெரிஞ்சும் நான் மறைச்சுட்டு இருக்கேனே என் பக்கம் எந்த காரணமும் இல்லையே. எந்த உண்மையும் ரொம்ப நாள் இருட்டுலையே இருக்க போறது இல்ல ரோகிணி. நாம செய்யுற எல்லா பாவ, புண்ணியமும் எதாவது ஒரு வகையில நம்மகிட்ட வரும். உண்மை வெளிய தெரியும். அன்னைக்கு உன்கூட சேர்ந்து நானும் ஒரு குற்றவாளியா தான நிப்பேன் என கேட்கிறார் மீனா.
55
முத்துவிடம் சிடுசிடுவென பேசும் மீனா
உங்களுக்கு தெரியும்னு நீங்க யாருகிட்டையும் சொல்லவே வேண்டாம் மீனா என கெஞ்சும் ரோகிணி, நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன் என கூறுகிறார். மத்தவங்க கிட்ட இருந்து மறைச்சாலும் என்னுடைய மனசாட்சியிடம் இருந்து நான் மறைக்க முடியாது. உன் வாழ்க்கைக்காக என்னோட நிம்மதியை எடுத்திருக்க என சொல்லிவிட்டு கீழே செல்கிறார் மீனா. அங்கு இரவில் இதை நினைத்து தூக்கம் வராமல் இருக்கும் மீனாவிடம், என்ன ஆச்சு என முத்து துருவி துருவி கேட்க, அதனால் டென்ஷன் ஆகிறார் மீனா. நீ எதையோ மறைக்குற அதுமட்டும் தெரியுது என சொல்லிவிட்டு செல்கிறார் முத்து. பின்னர் என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.