Palanivel talk about his New Shop : கடை எங்க இருக்கிறது, என்ன கடை என்று எனக்கு தெரியாது, நான் வேண்டும் என்றால் கேட்டு வந்து சொல்கிறேன் என்று பழனிவேல் சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் முழுவதும் பழனிவேல் கடை திறப்பது பற்றிய எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் சீரியலில் நாளைக்கு கடை திறப்பு விழாவை வைத்துக் கொண்டு இன்று வந்து சொல்கிறாய் என்று கோமதி தனது தம்பியை கடிந்து கொண்டார். அதோடு, தனது கணவரை குற்றவாளி போன்று கேள்வி மேல் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து கோபத்தில் கொந்தளித்த சுகன்யா இத்தனை ஆண்டுகாலமாக அவரை அடிமையாக வேலை வாங்குனது போதாதா? இன்னமும் உங்களது கடையில் வேலை பார்க்க வேண்டுமா? ஏன் சொந்தமாக தொழில் செய்ய கூடாதா அப்படி இப்படி என்று கேள்வி கேட்டு அசத்தினார்.
26
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ
இதைத் தொடர்ந்து பழனிவேலுவிற்கு அவரது அம்மா தான் ஆறுதலாக இருந்தார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். இன்றைய 640ஆவது எபிசோடில், செந்தில் மற்றும் மீனா இருவரும் தங்களது வீட்டிற்கு வந்தனர். அப்போது செந்தில், என்ன மாமா என்னிடம் கூட சொல்லவே இல்லை என்று கேட்டார். அதற்கு கதிர் இந்த கேள்வியை பல பேர் வேறு வேறு விதமாக கேட்டாச்சு என்றார். மீனா சித்தப்பா எப்போது கடை திறப்பு விழா என்று கேட்க அதற்கு பழனிவேல் 10 மணி என்று சொல்லியிருப்பதாக சொன்னார்.
36
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய புரோமோ
மேலும், கடை திறப்பதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்றார். பாண்டியனும், சரவணனும் கடைக்கு சென்ற நிலையில், அவர்கள் வரமாட்டாங்களா என்று பழனிவேல் கேட்க, அதற்கு தெரியவில்லை. ஆனால், நாங்கள் வருவோம். நாங்கள் வரலாம் அல்லவா என்றார். அதற்கு பழனிவேல் உடனே நீங்கள் எல்லோருமே கடை திறப்பு விழாவிற்கு வரவேண்டும் என்றார். பெரிய கடையா? எந்த இடத்தில், பைக்கிலேயே சென்ருவிடலாமா அல்லது நடந்து போகும் தூரமா? என்று ஆளாளுக்கு கேட்க, உடனே தெரியாது, நான் இன்னும் பாக்கல, எங்க இருக்கு என்று கூட எனக்கு தெரியாது.
46
பாண்டியன், கோமதி, காந்திமதி
நான் அண்ணன்களிடம் கேட்டதற்கு அப்புறமா சொல்றேன் என்று சொல்லி தட்டி கழித்தார்கள். நானும் எனக்கு விருப்பம் இல்லாமல் வேறேதோ சிந்தனையில் அப்படியே விட்டுவிட்டேன். அதற்கு ராஜீ சித்தப்பா நாங்கள் எல்லோரும் இப்போது எப்படி வருவது என்று கேட்க நான் வேண்டுமென்றால் கேட்டு வந்து சொல்லவா என்று தனது அண்ணன்கள் வீட்டிற்கு சென்றார்.
56
சொந்தமாக கடை திறக்கும் பழனிவேல்
அங்கு அக்கா, மாமா எல்லோரும் வருவார்கள். வரட்டுமா என்று கேட்க, அதற்கு வேண்டாம் என்று சொன்னால் சும்மாவா இருப்ப, வரட்டும் என்று சக்திவேல் சொன்னார். அப்போது அவங்களுக்கு கடை அட்ரஸ் சொல்ல வேண்டும். எனக்கும் தெரியாது என்று பழனிவேல் சொல்ல, உடனே காந்திமதி எங்களுக்கே தெரியாது டா என்றார். கடை மெயின் என்று சொன்னீங்க, ஆனால், கோயில் பக்கத்திலேயே அல்லது பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலா என்று சுகன்யா கேட்டார்.
66
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
எல்லாவற்றையும் விட முக்கியமான இடத்தில் தான் கடையை ஆரம்பிக்கிறோம் என்று சக்திவேல் சொல்லவே எல்லோரும் கடையை பற்றி கேட்க ஆரம்பிக்க அது தான் சஸ்பென்ஸ் என்று குமரவேல் சொன்னார். கடையை மட்டும் நீங்கள் பாத்தீங்கனா அப்படியே ஆச்சரியமா பார்ப்பீர்கள் என்று சொல்வதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது.