எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷன் - பார்கவியின் திருமணம் செல்லாது என நிரூபனம் ஆனதால், அவர்களை போலீஸ் உதவியுடன் பிரித்துள்ளார் ஆதி குணசேகரன். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், தர்ஷன் - அன்புக்கரசிக்கு திருமணம் நடந்ததாக கூறி ஆன்லைனில் பதிவு செய்துள்ளதால், தர்ஷன் - பார்கவியின் திருமணம் செல்லாமல் போய் உள்ளது. இதனால் தர்ஷனை புருஷன் என உரிமை கொண்டாடத் தொடங்கி உள்ளார் அன்புக்கரசி. மேலும் பார்கவியை இந்த வீட்டை விட்டு துரத்த முடிவெடுத்து, போலீஸிடம் புகார் கொடுத்திருந்தார் ஆதி குணசேகரன். இதையடுத்து வீட்டுக்கு வந்த மகளிர் போலீஸ், பார்கவியை உடனே இந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார். அவரை தடுத்து நிறுத்திய நந்தினி, பார்கவி தன்னுடைய உறவுக்கார பெண் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
தர்ஷனை பிரியும் பார்கவி
நந்தினி, பார்கவியை தன்னுடைய உறவினர் என்று சொன்னாலும் அசராத ஆதி குணசேகரன், சரி அந்தப் பொண்ணு இங்கயே இருக்கட்டும், அவளுக்கும் தர்ஷனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு எழுதி வாங்குங்க என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். இதைக்கேட்டு அனைவரும் ஷாக் ஆகிறார்கள். அந்த லேடி போலீஸும், கையெழுத்து போடலேனா உன்னை ஜெயிலுக்கு அனுப்பிடுவோம் என சொல்லி மிரட்டியதால் வேறுவழியின்றி கையெழுத்து போடுகிறார் பார்கவி. இதனால் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்ற தர்ஷன் - பார்கவியின் திருமணம் செல்லாக்காசு ஆகி இருக்கிறது.
34
சக்தியை தேடி அலையும் ஜனனி
மறுபுறம் குற்றாலத்திற்கு சென்ற ஜனனி, அங்கு சக்தியை தேடி அலைகிறார். அங்குள்ள கடை ஒன்றில் சக்தியை பற்றி விசாரிக்கையில், அந்த கடைக்காரர் சக்தி தன்னுடைய கடைக்கு வந்ததாகவும், அவர் 500 ரூபாய் கொடுத்து பழம் வாங்கியபோது தன்னிடம் சில்லரை இல்லாததால், அதை என்னிடமே கொடுத்துவிட்டு சென்றார். அதனால் அவரை நியாபகம் இருக்கிறது என சொல்கிறார். பின்னர் அவர் எந்த வழியில் சென்றார் என்கிற தகவலையும் அவர் ஜனனியிடம் சொல்ல, ஜனனி அந்த வழியே சென்று சக்தியை தேடுகிறார். கிட்டத்தட்ட சக்தி இருக்கும் இடத்தை அவர் நெருங்கிவிட்டதாக தெரிகிறது.
மறுபுறம் வீட்டில் தர்ஷனை பார்கவியிடம் இருந்து பிரித்து தனது ரூமுக்கு அழைத்து செல்லும் அன்புக்கரசி, அவரை நெருங்கி வருகிறார். அப்போது விலகி செல்லும் தர்ஷனிடம், இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னரும் போனீங்க, உங்க அப்பா மிரட்டுனதுனால திரும்பி வந்துட்டீங்க. அதேபோல் இப்பவும் வருவீங்க என சொல்ல, கட்டிலில் முட்டிக் கொள்கிறார் தர்ஷன். பின்னர் ரூமுக்குள் வரும் குணசேகரனிடம் என்னை இப்படி டார்ச்சர் பண்ணீங்கனா நான் தற்கொலை பண்ணிப்பேன் என பிளாக்மெயில் பண்ணுகிறார் தர்ஷன். குணசேகரனும் செத்துத் தொல என சொல்லிவிட்டு செல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.