ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களில் அதிக வியூஸ் அள்ளிய மூவீஸ் லிஸ்டை ஓர்மேக்ஸ் தளம் வார வாரம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய படங்களை பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கே அதிக வரவேற்பு கிடைக்கிறது. கடந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கு மேல் பார்த்த பார்வையாளர்களைக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் 'காந்தாரா 1' கலக்கி வருகிறது. டாப் 5 ஓடிடி படங்கள் என்னவென்று பார்ப்போம்.
26
டாப் 1-ல் காந்தாரா சாப்டர் 1
'காந்தாரா சாப்டர் 1' கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்தப் படம், 800 கோடிக்கு மேல் வசூலித்தது. பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய இப்படம், அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி 33 லட்சம் வியூஸ்களுடன் முதலிடத்தில் உள்ளது.
36
டாப் 2-ல் 'பாரமுல்லா'
இரண்டாவது இடத்தில் 'பாரமுல்லா' என்ற இந்திப் படம் உள்ளது. இது ஒரு சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் இந்தப் படம், கடந்த வாரத்தில் 30 லட்சம் வியூஸ்களைப் பெற்று ஓடிடியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மூன்றாவது இடத்தில் மலையாளப் படமான 'லோகா சாப்டர் 1 : சந்திரா' உள்ளது. துல்கர் சல்மான் தயாரித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி, 27 லட்சம் வியூஸ்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
56
டாப் 4-ல் அக்ஷய் குமாரின் 'ஜாலி எல்எல்பி 3'
நான்காவது இடத்தில் பாலிவுட் படமான 'ஜாலி எல்எல்பி 3' உள்ளது. அக்ஷய் குமார் நடித்த இந்த லீகல் காமெடி டிராமா, திரையரங்குகளில் சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனால் நெட்ஃபிளிக்ஸில் 22 லட்சம் வியூஸ்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
66
டாப் 5-ல் ஹாலிவுட் படமான 'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்'
இந்திய ஓடிடியில் ஹாலிவுட் படமான 'தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' டாப் 5-ல் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இப்படம், 20 லட்சம் வியூஸ்களுடன் கலக்கி வருகிறது. திரையரங்குகளில் 4000 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், ஓடிடியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.