தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷமான இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொதுவாக காதல், சண்டை, ஆக்சன், ஹாரர் போன்ற கதைகளை இயக்குவது என்பது மிகவும் கஷ்டம் என்றாலும், அதைவிட மிகவும் சவாலான ஒன்று, நாவலையோ, சிறுகதையோ, திரைப்படமாக இயக்கி மக்கள் ரசிக்கும் வகையில் திரைப்படமாக இயக்குவது.
இதில் புரோட்டா சூரி, என ரசிகர்கள் மத்தியில் பிரபலமான காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். கான்ஸ்டபிள் வேடத்தில், நடித்திருந்த சூரி இந்த படத்திற்காக அந்த அளவுக்கு தன்னுடைய உழைப்பை செலுத்தியிருந்தார் என்பது, அவரது நடிப்பிலும்... தோற்றத்திலும் நன்றாகவே தெரிந்தது. பிட்டான உடலை மாற்றி, அளவான நடிப்பை வெளிப்படுத்தி அசத்து இருந்தார். இவரை விட இந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் பொருந்த மாட்டார்கள் என்றும் நினைக்க வைத்தது சூரியின் நடிப்பு. குறிப்பாக தன்னை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்த வெற்றிமாறனுக்கு சூரி வெற்றியைத் தேடித் தந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
அதே போல் நடிகர் விஜய் சேதுபதி... பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து விடுதலை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தார். அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 28ஆம் தேதி, ஜீ 5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
திரையுலகில் அதிர்ச்சி.! பிரபல நடிகருக்கு திடீர் மாரடைப்பு..! கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவல்..!