நடிகர் அஜித்தின் 62-வது படம் குறித்த அறிவிப்பு கடந்த 2022-ம் ஆண்டே வெளிவந்தது. அப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அதன் ஷூட்டிங் தொடங்க இருந்த சூழலில் படத்தின் கதையில் திருப்தி இல்லை எனக்கூறி விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கியது லைகா நிறுவனம். இதைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட் ஆனார். அப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
24
ரிலீசுக்கு ரெடியான விடாமுயற்சி
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பம் ஆனது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைய கிட்டத்தட ஓராண்டு ஆனது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் ரெஜினா கசெண்ட்ரா, ஆரவ், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
விடாமுயற்சி திரைப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ரீமேக் விவகாரத்தில் பிரச்சனை வந்ததால் இப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கியது. இதையடுத்து அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, அப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
44
விடாமுயற்சி முதல் விமர்சனம் சொன்ன அனிருத்
அதன்படி விடாமுயற்சி பட புரமோஷனின் போது படம் பார்த்த இசையமைப்பாளர் அனிருத் என்ன சொன்னார் என்பது பற்றி இயக்குனர் மகிழ் திருமேனி பகிர்ந்துகொண்டுள்ளார். அதன்படி, படம் பார்த்த அனிருத், படம் பட்டாசாய் இருக்கிறது என சொன்னாராம். மேலும், இப்படம் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் என்றும் கூறினாராம். தன்னைக் காட்டிலும் இப்படத்தில் அதிக உற்சாகத்தோடு பணியாற்றிய நபர் என்றால் அது அனிருத் தான் என கூறி உள்ள மகிழ் திருமேனி, நம்ம ஒன்னு கொடுத்தால் அதை மேலும் மெருகேற்றுவதே அனிருத்தின் ஸ்பெஷல் என வியந்து பாராட்டி இருக்கிறார் மகிழ்.