பராசக்தி டைட்டில் சர்ச்சை
சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1952-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பராசக்தி. இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் சிவாஜி. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்சி பேசிய படம் என்பதால் அதன் டைட்டிலுக்கு மிகவும் மவுசு இருந்து வந்தது. இந்த நிலையில், 73 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த டைட்டிலை சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு சூட்டி உள்ளனர்.
விஜய் ஆண்டனி vs சிவகார்த்திகேயன்
நேற்று மாலை தான் எஸ்.கே.25 படத்திற்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு முன்னதாகவே நேற்று காலை விஜய் ஆண்டனி தன்னுடைய 25வது படத்தின் தலைப்பை வெளியிட்டு இருந்தார். அதன் தமிழ் தலைப்பு ‘சக்தித் திருமகன்’ என்றும், தெலுங்கு தலைப்பு ‘பராசக்தி’ என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரே தலைப்பில் இரண்டு படங்களா என குழம்பிப் போய் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... பெரும் சேனை ஒன்று தேவை; வெளியானது சிவகார்த்திகேயனின் பராசக்தி டீசர்!
விஜய் ஆண்டனி அறிக்கை
இந்த நிலையில், டைட்டில் தொடர்பான சர்ச்சை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி தன்னுடைய விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ந் தேதியே பராசக்தி என்கிற டைட்டிலை தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் பதிவு செய்துவிட்டதாகவும் அதற்கு அவர்கள் அனுமதி அளித்ததற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார். இதனால் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.25 படக்குழு தான் விதிமீறி அந்த டைட்டிலை வைத்ததா என்கிற கேள்வி எழுந்தது.
ஏவிஎம் நிறுவனம் அறிக்கை
அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக அந்த டைட்டிலுக்கு சொந்தக்காரரான ஏவிஎம் நிறுவனமே அதுகுறித்து அறிக்கையை வெளியிட்டது. அதில் 73 ஆண்டுகளாக தங்களிடம் இருந்த பராசக்தி எனும் தலைப்பை சிவகார்த்திகேயனின் படத்திற்கு தாங்கள் வழங்கி இருப்பதாகவும். அந்த தலைப்பு அந்தப் படத்தின் கதையை மேலும் ஒளிரச்செய்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளிக்கட்டும் என வாழ்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் பராசக்தி டைட்டிலை எஸ்.கே.25 படக்குழு தங்களிடம் முறைப்படி அனுமதிஅ பெற்று வைத்துள்ளதாக ஏவிஎம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தமிழில் விஜய் ஆண்டனி 25 மற்றும் எஸ்.கே.25 படங்களின் தலைப்பு வெவ்வேறாக இருந்தாலும் தெலுங்கில் தான் இந்த படங்கள் ஒரே தலைப்பில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பராசக்திக்கு இவ்ளோ டிமாண்டா! SK மற்றும் விஜய் ஆண்டனியின் 25வது பட டைட்டிலால் குழப்பம்!