பாலாவின் சினிமா வாழ்க்கையில் மோசமான வசூல்; வணங்கான் பட மொத்த கலெக்ஷனே இவ்வளவு தானா?

Published : Jan 29, 2025, 07:39 PM IST

அருண் விஜய் நடிப்பில் வெளியான 'வணங்கான்' திரைப்படத்தின் ஓட்டு மொத்த வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

PREV
15
பாலாவின் சினிமா வாழ்க்கையில் மோசமான வசூல்; வணங்கான் பட மொத்த கலெக்ஷனே இவ்வளவு தானா?
வணங்கான்:

இயக்குநர் பாலாவின் படைப்புகளில் வந்த ஹிட் படங்கள் வரிசையில் சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்கள் தனி இடம் உண்டு. இந்த படங்களின் வரிசையில் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்த படம் தான் 'வணங்கான்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

25
வணங்கானை விட்டு வெளியேறிய சூர்யா:

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கமிட்டானது நடிகர் சூர்யா தான். அவரை வைத்து 1 மாதம் ஷூட்டிங் செய்த இயக்குனர் பாலா பின்னர் சூர்யா இந்த கதைக்கு செட் ஆகவில்லை என கூறி வெளியேற்றினார்.  ஆனால் கதையின் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இந்த படத்திலிருந்து சூர்யா விலக காரணம் என கூறப்பட்டது. 
 

35
அருண் விஜய் :

சூர்யா விலகிய பின்னர், நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுவரையில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வந்த அருண் விஜய் இந்தப் படத்தில் வாய் பேச முடியாத காது கேளாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே நலல் வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் கதையில் சில தொய்வு இருந்தது. இந்த படத்தின் வசூல் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
 

45
கலவையான விமர்சனங்களை பெற்ற படம்:

இந்த படத்தில் மிஷ்கின் , சமுத்திரக்கனி, வரலட்சுமியின் தாயார் சாயா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தங்கை கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு கொடுத்த முக்கியத்துவம் கூட கதாநாயகிக்கு கொடுக்கப்பட வில்லை. வணங்கான் ட்ரைலர் ஏற்படுத்திய தாக்கத்தை கூட இந்த படம் ஏற்படுத்த வில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்தது. 
 

55
ரூ.9 கோடி வசூல்

வணங்கான் திரைப்படம் வெளியாகி 19 நாட்கள் ஆன நிலையில், இப்படம் மொத்தமாகவே ரூ.9 கோடி தான் இதுவரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரையில் பாலா இயக்கத்தில் வந்த படங்களில் மிகவும் மோசமான வசூல் வணங்கான் படத்திற்கு தான் என திரைப்பட வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வணங்கான் பட வசூல் குறித்து படக்குழு எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories