ரஜினியின் 'கூலி' தீபாவளி எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'கூலி'. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'கூலி'. தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தின் மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார். அவர் பல ப்ராஜெக்ட்களில் பிஸியாக நடித்து வருகிறார். டி. ஜே. ஞானவேல் இயக்கிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான 'வேட்டையன்' பாக்ஸ் ஆபிஸில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்பதால். தற்போது, அனைவரின் எதிர்பார்ப்பும் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தின் மீது திரும்பி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் தங்கக் கடத்தலை மையமாகக் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி கார்த்திருக்கின்றனர். முதலில், மே தினத்தில் 'கூலி' வெளியாகும் என்று தகவல்கள் வெளியான.
கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!
எனினும் இப்படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால், கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளிக்கு மாற்றப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் அதிக வசூல் கிடைக்கும் என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ரஜினிகாந்தின் உடல்நிலை மற்றும் பிற காரணங்களால் சிறிது இடைவெளிக்குப் பிறகு, படப்பிடிப்பு மீண்டும் படக்குழு தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் தங்கக் கடத்தல்காரராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அக்கினேனி நாகார்ஜுனா, சத்யராஜ் மற்றும் சௌபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிரூத் ரவிச்சந்தர் இசையமைக்க, கலைப்புலி எஸ். தாணு வி கிரியேஷன்ஸ் பேனரில் இந்த படத்தை தயாரிக்கிறார்.
15 வருஷமா அவர் கூட ரிலேஷன் ஷிப்பில் இருக்கேன்! காதலை ஓப்பனாக கூறிய அபிநயா!