சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன் அவர் படங்களுக்கு வைக்கப்பட்ட பழைய பட டைட்டில்கள் பற்றி பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் படங்களும்... பழைய பட டைட்டில்களும்
பழைய பட டைட்டில்களை வைப்பது தற்போது டிரெண்டாக மாறி இருக்கிறது. அந்த வகையில் அண்மையில் சிவாஜி கணேசனின் பராசக்தி பட டைட்டிலை சிவகார்த்திகேயனின் 25வது படமான எஸ்.கே.25 படத்துக்கு சூட்டி இருக்கின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தன் படத்திற்கு பழைய பட டைட்டிலை பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல, இதற்கு முன் 5 முறை இதுபோல் பழைய டைட்டில்களை பயன்படுத்தி இருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
27
எதிர்நீச்சல்
சிவகார்த்திகேயனுக்கு முதல் வெற்றியை கொடுத்த படம் என்றால் அது எதிர்நீச்சல் தான். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் எஸ்.கே நடித்த இப்படம் கடந்த 2013-ம் ஆண்டு திரைக்கு வந்தது. இதுவும் ஒரு பழைய பட டைட்டில் தான். கடந்த 1968-ம் ஆண்டே நாகேஷ் நடித்த படத்திற்கு எதிர்நீச்சல் என பெயரிடப்பட்டு இருந்தது.
37
காக்கி சட்டை
எதிர்நீச்சல் வெற்றிக்கு பின்னர் துரை செந்தில்குமார் உடன் சிவகார்த்திகேயன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்த படம் காக்கி சட்டை. இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார் எஸ்.கே. இப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. இதே பெயரில் கடந்த 1985ம் ஆண்டே கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம் ரிலீஸ் ஆனது.
47
வேலைக்காரன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1987-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் வேலைக்காரன். அதே தலைப்பை நடிகர் சிவகார்த்திகேயனும் பயன்படுத்தி இருந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு வேலைக்காரன் என டைட்டில் வைக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன் பயன்படுத்திய மற்றொரு ரஜினி பட டைட்டில் தான் மாவீரன். ரஜினிகாந்த் நடிப்பில் 1986-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் எஸ்.கே. நடித்த ஃபேண்டஸி திரைப்படத்திற்கும் அதே தலைப்பு பயன்படுத்தப்பட்டது.
67
அமரன்
நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அமரன். அப்படத்தின் தலைப்பை கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன தன் படத்திற்கு பயன்படுத்தி இருந்தார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டு அப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
77
பராசக்தி
தொடர்ந்து பழைய பட டைட்டில்களாக பயன்படுத்தி வரும் சிவகார்த்திகேயனின் லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள படம் பராசக்தி. சிவாஜி கணேசனின் கிளாசிக் ஹிட் பட டைட்டிலான இதை 73 ஆண்டுகளுக்கு பின் பயன்படுத்தி இருக்கிறார் எஸ்.கே. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.