நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்த அஜித் தன்னுடைய உழைப்பால் அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்று இன்று தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோவாக மகுடம் சூடி இருக்கிறார். இவருக்கு இந்த அடையாளத்தை கொடுத்தது அவரின் வெறித்தனமான ரசிகர்கள் தான். தன்னுடைய ரசிகர்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் அஜித், அவர்கள் தப்பு செய்தாலும் அதை தட்டி கேட்காமல் விட்டதில்லை.
24
கடவுளே அஜித்தே கோஷம்
அந்த வகையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் கடந்த ஆண்டு, பொது இடங்களில் ‘கடவுளே... அஜித்தே’ என்கிற கோஷம் எழுப்பி, அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட அந்த பதிவு வைரலானது. பின்னர் செல்லும் இடமெல்லாம் இதுபோல கோஷமிட்டு அலப்பறை செய்யத் தொடங்கினர். குறிப்பாக கோவிலுக்கு சென்றால் கூட அங்கும் கடவுளே... அஜித்தே என்கிற கோஷத்தை எழுப்பி அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.
இப்படி ரசிகர்கள் தான் ஒருபக்கம் கத்துகிறார்கள் என்றால் அவர்களுக்கு பூஸ்ட் ஏற்றிவிடும் விதமாக இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய பாடலில் அந்த வரிகளை வைத்தார். இதனால் கடவுளே அஜித்தே கோஷம் பூதாகரம் ஆனது. நிலைமை கைமீறி போனதால், நடிகர் அஜித்தே களத்தில் இறங்கி ரசிகர்களுக்கு வார்னிங் கொடுத்தார். இனி இதுபோல ‘கடவுளே... அஜித்தே’ கோஷம் போட வேண்டாம் என அன்புக்கட்டளையிட்டு இருந்தார் அஜித். அவரின் அறிக்கைக்கு பின்னும் ரசிகர்கள் இன்னும் திருந்தியபாடில்லை.
44
அஜித் அதிருப்தி
இந்த நிலையில், சுமார் 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டர் முன் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்ததோடு மட்டுமின்றி, கடவுளே அஜித்தே என கோஷமிட்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். தன்னுடைய பேச்சை கேட்காமல் ரசிகர்கள் மீண்டும் கடவுளே அஜித்தே என கோஷம் போட்டு வருவது நடிகர் அஜித்தை அப்செட் ஆக்கி உள்ளதாம். படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் தன் பேச்சை கேட்கவில்லையே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் அஜித்.