அஜித்துக்கு காத்திருந்த அதிர்ச்சி; இன்டெர்வல் ட்விஸ்ட் வெறித்தனம்! லீக்கான தகவல்!

Published : Feb 06, 2025, 10:43 AM IST

அஜித் நடிப்பில், இன்று வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெறித்தனமான இன்டர்வெல் பிளாக் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

PREV
15
அஜித்துக்கு காத்திருந்த அதிர்ச்சி; இன்டெர்வல் ட்விஸ்ட் வெறித்தனம்! லீக்கான தகவல்!
விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கு?

தல அஜித் நடிப்பில், உருவாகி உள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி, பின்னர் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை லைகா நிறுவனமும் உறுதி செய்த நிலையில், பின்னர் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக 'விடாமுயற்சி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. இந்த தகவல் 'விடாமுயற்சியை' பார்க்க காத்திருந்த அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
 

25
மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகியுள்ள விடாமுயற்சி

ஒரு வழியாக அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து, தற்போது 'விடாமுயற்சி' திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதியான இன்று, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் ஹாலிவுட் இயக்குனர் Jonathan Mostow இயக்கத்தில், 1997-ஆம் ஆண்டு, கிரைம் திரில்லராக வெளியான 'பிரேக் டவுன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக  வெளியாகியுள்ளது.

ஒன்னில்ல; ரெண்டு ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுக்கப்பட்ட விடாமுயற்சி!

35
ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் பெற்று வருகிறது

ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை ரிமேக் செய்து என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் அந்த ஹாலிவுட் திரைப்படம் தென் இந்திய ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும்படி எடுப்பது ஒரு சாகசம் செய்வதுபோல். இந்த சாகசத்தை இயக்குனர் மகிழ் திருமேனி, 'விடாமுயற்சி' திரைப்படத்தின் மூலம் சிறப்பாக செய்துள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் காலை முதல் ரசிகர்கள் இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருவதால், இப்படத்தின் வசூல் முதல் நாளே 100 கோடியை எட்டும் என திரைப்பட ஆர்வலர்கள் தெரிவித்து கூறுகிறார்கள்.
 

45
கடத்தப்படும் அஜித்தின் மனைவி:

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ஆரவ். ரவி ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டுள்ளது. உருகி உருகி காதலித்த திருமணம் செய்து கொள்ளும் அழகான ஜோடி, ஒரு கட்டத்தில் தங்களுடைய ரிலேஷன்ஷிப்பில் இருந்த பிரிய முடிவெடுக்கின்றனர். கணவரை பார்க்க அஜர்பைஜான் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது அஜித்தின் மனைவியான த்ரிஷா கடத்தப்படுகிறார். அவரை மீட்க அஜித் எடுக்கும் முயற்சியே இந்த திரைப்படம் . இதில் அஜித்துக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவருகிறது.

Vidaamuyarchi Review : அஜித் சாதித்தாரா? சோதித்தாரா? விடாமுயற்சி விமர்சனம் இதோ
 

55
விடாமுயற்சி படத்தின் எதிர்பாராத இன்டெர்வல் பிளாக்:

இந்நிலையில் இந்த படத்தின் இன்டர்வல் பிளாக்கை இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய ட்விஸ்டுடன் உருவாக்கியுள்ளார். இது குறித்த தகவல் தான் தற்போது லீக் ஆகியுள்ளது. தன்னுடைய மனைவியை மீட்கும் முயற்சியில் அஜித் பல பிரச்சினைகளை சந்திக்கும் நிலையில், ரெஜினா மற்றும் அர்ஜுன் இருவரும் அஜித்தை பார்த்து.. "முட்டாள் இந்த கடத்தலை செய்ய சொன்னதே உன் பொண்டாட்டி தான் என கூறுகிறார்கள். இதை சற்றும் எதிர்பாராத அஜித் அதிர்ச்சியில் உறைகிறார்.  இதன் மூலம் நடிகை திரிஷா தான் இந்த படத்தின் வில்லியா என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. இது மட்டும் இன்றி இன்னும் பல எதிர்பாராத காட்சிகள் மற்றும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் இந்த படத்தில் இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களில் தெரிவித்து வருகின்றன.

click me!

Recommended Stories