பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில், வரலாற்று பின்னணியை கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் சாவா. இந்த திரைப்படம் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
24
சாவா முதல் நாள் வசூல்:
அதன்படி ரசிகர்களின் பேராதரவுடன், முதல் நாளில் 'சாவா' திரைப்படம் ரூ. 30 முதல் ரூ.32 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு பாலிவுட் திரையுலகில் வெளியான அக்ஷய் குமாரின் ஸ்கை ஃபோர்ஸ் திரைப்படம் முதல் நாளில் (ரூ.15.30 கோடி) வசூலித்ததே அதிக வசூலாக இருந்த நிலையில், தற்போது அதை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது விக்கி கௌஷலின் சாவா திரைப்படம்.
மேலும் இந்த படத்தில், அக்ஷய் கண்ணா மற்றும் அஷுதோஷ் ராணா உள்ள பலர் நடித்துள்ளனர். சாவா திரைப்படம், மராத்தி நாவலைத் தழுவி வீரம் மற்றும் துணிச்சலின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
44
ஏ. ஆர். ரஹ்மான் இசை:
ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இர்ஷாத் கமில் பாடல்களை எழுதியுள்ளார். முதல் நாளிலேயே சாதனை வசூலை இப்படம் பதிவு செய்துள்ள நிலையில், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வர உள்ளதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.